Monday, February 25, 2013

துபாயில் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா அவர்களின் உரையின் சுருக்கம்.) துபாயில் நடைபெற்ற (SEED) சீட் ட்ரஸ்ட்ஆலோசனைக் கூட்டதில்

( துபாயில் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா அவர்களின் உரையின் சுருக்கம்.)
 துபாயில் நடைபெற்ற (SEED) சீட் ட்ரஸ்ட்ஆலோசனைக் கூட்டதில்


துபாயில் தமிழ்நாடு சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டு கழக (SEED) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டு கழக ஆலோசனைக்கூட்டம் ஆலியா குரூப் மேலாண்மை இயக்குனர் தாவூத் மரைக்காயர் தலைமையில் துபாய் -ரஷீதியாவில் நடைபெற்றது.

தொழில் அதிபர் கீழக்கரை ஹுசைன் காகா, இந்தியன் முஸ்லிம் அசோசியேசன் விழாக்குழு இணைச்செயலாளர் அப்துல் காதிர், கடையநல்லூர் ஜமாஅத் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா, திரிகூடபுரம் இபுராஹீம், முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு இறுதியாக தாயகத்திலிருந்து வந்திருந்த தமிழ்நாடு சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டு கழகத் தலைவர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா
"SEED "   செயல்பாடுகள் பற்றி மிக விரிவாக எடுத்துக்கூறினார் . அவர் பேசும்போது , 2008 - ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட"SEED "  மைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட ஜமாத்துகளின் ஆதரவோடு  1500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ஒன்னறை கோடி ருபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது .

தமிழகம் முழுவதும் 10 கல்லூரி மையங்களில் தமிழ்நாடு அரசு   களுக்கான  இலவச பயிற்சி வழங்க நிதி உதவி வழங்கப்படுகிறது .

சென்னை புதுக்கல்லூரியில் IAS ,IPS மற்றும் மத்திய ,மாநில அரசுகளின் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் நடத்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது .

தமிழகம் முழுவதும் இதுவரை 600 பள்ளிவாசல்களில் ஜகாத் பைத்துல்மால் ஆரம்பிக்கப் பட்டு ஒவ்வொரு பைத்துல்மாலுக்கும் ரூ .10,000 வழங்கப்பட்டுள்ளது .

ஏழைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் பைத்துல்மால்கள் பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் நடைபெற்று வருகின்றன.

சென்னை புதுக்கல்லூரியில் IAS ,IPS மற்றும் மத்திய ,மாநில அரசுகளின் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் நடத்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது .

அமீரகத்தில் வாழும் மக்கள் ,பைத்துல்மால் ஆரம்பிக்கப் பட்ட ஊர்களில் அந்ததந்த ஊர்களை சார்ந்தவர்கள் பைத்துல்மால்கள் செம்மையாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள் ; பைத்துல்மால்கள் ஆரம்பிக்கப்படாத ஊர்களை சார்ந்தவர்கள் ஊர் பள்ளி ,ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்புகொண்டு ஆரம்பிக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டார் .


செய்தி தொகுப்பு : அபு ஆஸிமா

No comments:

Post a Comment