Wednesday, February 27, 2013

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்


மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!




* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.

* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.


* வாதஉடம்புக் காரர்கள் அதிக வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் எடையைக் குறைக்க நினைத்தால் சில சமயங்களில் மாதவிலக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு. பித்த உடம்பைக் கொண்ட மகளிருக்கு மாதவிலக்கு இடைவெளி குறையும். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். 5 நாட்களுக்கு மேல்கூட உதிரப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு, முகத்தில் பருக்கள் தோன்றும். உடம்பு தடித்து காணப்படும். ஒருபக்க தலைவலி தோன்றலாம். கப உடம்பு மகளிருக்கு இயல்பான உதிரப்போக்கு இருக்கும். ஆனால் இவர்களுக்கு பல உபாதைகள் அதாவது மார்பகங்களில் வீக்கம், முதுகு, இடுப்பு, கை, கால்களில் வலி போன்றவை ஏற்படும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தகைய உபாதைகளுக்கு உணவு மூலமும், ஓய்வின் மூலமும் நடைமுறையிலேயே தீர்வு காணலாம். கடைபிடிக்க வேண்டியவை · முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். · மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும். · மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். · எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. · அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.

* பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும். · அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும். · ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது. · டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. · காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துவது நல்லது. ·
* வாசனை திரவியங்களை உபயோகப் படுத்த வேண்டாம். மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால் பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும். மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும். மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது

No comments:

Post a Comment