Friday, February 15, 2013

.முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன?
முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன? 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியர் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் அரசியல் தலைவர்களின் கைங்கரியங்கள், ஆதாயங்கள் இவற்றால்.. அந்த உரிமைகள் சரியாக மக்களிடம் சென்றடைவதில்லை என்பதே உண்மை. களையக்கூடிய குறைபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்வது சரியல்ல.

லஞ்சம், ஊழல், லட்சியமற்ற அரசியல்வாதிகள், இவர்களோடு கைக் கோர்த்துக்கொண்ட வளர்ந்துவிட்ட வகுப்புவாதிகள், கல்வியின்மை, சரியான தலைமையின்மை, ஒற்றுமையின்மை போன்றவை முஸ்லிம்களின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாகும். அரசியல் சுயநலங்களாலும், பிரித்தாளும் சூழ்ச்சிகளாலும் இங்கு முஸ்லிம்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடு பிரிவினை அடைவதற்கு முன்னமே விதைக்கப்பட்ட வகுப்புவாதம் என்னும் நச்சுமரங்கள் இன்று காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வளர்ந்து படர்ந்து விட்டுள்ளன. இந்த துவேஷம் காவல் துறையிலிருந்து நீதித்துறைவரை தங்கு தடையில்லாமல் ஊடுருவியுள்ளது. அதனால்தான.. பதவிக்காலம் முடிந்ததும், இத்துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் வகுப்புவாத இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.தேர்தல்களிலும் பங்கெடுக்கிறார்கள். வகுப்புவாதிகளின் 50 ஆண்டுகால முயற்சியின் அறுவடை இது.

வகுப்புவாதிகளின் வளர்ச்சியும், அவர்களின் செயல்பாட்டால்... விளையும் கொடுர நிகழ்வுகளும் முஸ்லிம்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. இனம் புரியாத பீதியிலும், அச்சத்திலும் அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

பொதுசிவில் சட்டம் கொணரும் முயற்சியால்.. ஷரீஅத் சட்டங்களுக்கு ஆபத்து! தங்களது நம்பிக்கைகளுக்கும் தனித்தன்மைகளுக்கும் பேராபத்து என்ற சிந்தனையால்.. அவை பறிப்போகாமல் காப்பதற்கான முயற்சிகளால்.. ஒவ்வொரு காலக்கட்டத்திரும் அவர்களின் முயற்சிகள் திசைத்திருப்பப்படுகிறது. நேரம் செலவாகிறது. இதன் விளைவு தேசநிர்மாணத்தின் பக்கம் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இந்த பங்களிப்பு குறைந்ததன் விளைவாக தேச, சமுதாய, அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் பின்தள்ளப்பட்டுவிட்டார்கள்.

அடுத்தது, நாட்டு விடுதலைக்குப் பின் அவர்களுக்கு சரியான தலைமை அமையாததும் அவர்களின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாகும். "40 ஆண்டுகாலம் கொடிபிடித்தே என் கைகள் காய்ப்பு காய்த்துவிட்டன!" - என்றார் ஒருமுறை மறைந்த முஸ்லிம் லீக்கின் தலைவர்களில் ஒருவரான அப்துல் லத்தீஃப் அவர்கள். காய்ப்புக் காய்த்த கைகள் மாற்றினது வேறொரு கொடி என்பது இறந்தகால வரலாறு. அவர்கள் படிப்பினைப் பெறவில்லை என்பதே இதன் பொருள்..

அரசியல் தலைவர்களால் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்ல முடியும்! அவர்கள் தங்கள் உழைப்பையும், நேரத்தையும், பொருளையும் குறிப்பிட்ட கட்சிக்கு அர்ப்பணித்து அதிலேயே கரைந்துருகி தங்களது வளர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்த தவறிவிட்டார்கள்.

அத்துடன் தேசப்பற்றால் அந்நிய மொழியாம் ஆங்கிலக் கல்வியை புறக்கணித்ததும் முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

"முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதற்கு யார் காரணம்? பின்தங்கியிருக்கிறார்கள் என்று த.மு.மு.க உட்பட பலரும் கூறுகிறார்கள். படிக்க வேண்டாம் என்று இவர்களை யார் தடுத்தார்கள்?" (இராம கோபாலன் -16.07.1999, விஜய பாரதம்)

இந்தக் கேள்வி வலுவானது. கேட்பவர் இராம கோபாலன் என்பதாலேயே கேள்வியில் நியாயமில்லை என்றாகிவிடாது. 

'இந்த நாட்டில் முஸ்லிம்களை கல்வி கற்க வேண்டாம் என்று யார் தடுத்தது? யாரும் தடுக்கவில்லை! அப்படியானால்.. முஸ்லிம்கள் அறிவைப் பெற வேண்டாமென்று இறைவேதம் தடுக்கிறதா? அல்லது இறைத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) தடுக்கிறார்களா?'

ஒருக்காலும் இல்லை. இறைவேதமும் தடுக்கவில்லை. இறைத்தூதரும் தடுக்கவில்லை. 

"இறைவா! என் அறிவை அதிகப்படுத்துவாயக!" (திருக்குர்ஆன் - 20:144)

"எவர்களுக்கு ஞானம் வழங்கப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கு இறைவன் உயர்ந்த பதவிகளை வழங்குவான்!" (திருக்குர்ஆன் - 58:11)

"எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார்" (திருக்குர்ஆன் - 2:269)

அறிவின் முக்கியத்துவம் குறித்து இத்தகைய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

"அறிவைப் பெற்று அதைப் பரப்புபவரே உங்களில் சிறந்தவராவார்!" - அறிவின் முக்கியத்துவம் குறித்து நபிகளார் (ஸல்) இதுபோன்ற பல பொன்னுரைகளை வழங்கியுள்ளார்கள்.

கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய திருமறையின் கட்டளைகளையும், திருநபிகளாரின் (ஸல்) பொன்னுரைகளையும் முஸ்லிம்கள் அலட்சியப்படுத்தினார்கள். இந்தப் புறக்கணிப்பால் பின்தங்கி போனார்கள். 

உண்மை நிலை இப்படி இருக்க முஸ்லிம்கள் கல்வி பெறாததற்கு மற்ற சமூகங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடுகள் அவசியம் என்னும் அதேவேளையில் அவற்றை நிரப்ப சீரான நடைமுறைகள் வேண்டும். அதற்கான பிரத்யேக பயிற்சிகள் தர வேண்டும். கற்போரை முனைப்புடன் உருவாக்க வேண்டும். ஏற்கனவே பிற சமுதாய மக்களுக்கான குறுகியகாலத்திட்டமான இடஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படாததால்.. நாடு விடுதலை அடைந்து இதுவரையிலான காலத்துக்கு அதன் அசல் இலக்கை அடைய முடியாமலிருக்கிறது.

அஞ்சலையின் வயிற்றிலிருக்கும் அமாவாசைக்கு இட ஒதுக்கீடு காத்திருந்தும் அவன் அதற்கான தகுதி பெறவில்லை. அதனால்.. காடு-கழனியில் வயிற்றுப்பாட்டுக்காக சகதியுடன் சகதியாக உள்ளான். ஹாஜிரா பீவியின் வயிற்றிலிருக்கும் சான் பாஷாவுக்கும் இதே நிலைதானே?

முஸ்லிம் சமுதாயத்தில் நடைமுறையில் நடப்பது என்ன?

பையனுக்கு பத்து வயதானதும், கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். பதினெட்டு வயதானதும் வெளிநாட்டு பயணத்துக்கு தயார் நிலையில் பாஸ்போர்ட்-விசா எடுக்கப்படுகிறது!

அதனால், இடஒதுக்கீடுக்கான கொடிகள் தூக்குவதைவிட முஸ்லிம் சமுதாயத்தை படித்த சமூகமாக மாற்றி அமைப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதே அவசியம். அதுதான் அறிவுடமைகூட!

தனது இனம், தனது மக்கள் என்று ஒரு வட்டத்துக்குள் முஸ்லிம்கள் அடைத்துக்கொள்ள முடியாது! அப்படி நபிகளார் (ஸல்) நினைத்திருந்தால்... இஸ்லாம் உலகம் முழுக்க பரவியிருக்காது!

அதனால்.. முஸ்லிம்கள் முதலில் தங்கள் பொறுப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். அறிவு ஜீவிகளாக, மனிதகுல நலன் விரும்பிகளாக, மனிதரில் மாணிக்கங்களாக தங்கள் பண்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருநாள் மாலையில், நடந்த உண்மை சம்பவம் இது. எனது வீட்டுக்கு எதிரே அடிபம்பு ஒன்று இருக்கிறது. அன்று எதிர்வீட்டுச் சிறுமி லட்சுமி தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள். பம்பின் வாஷர் தேய்ந்து போனதால்... "கிறீச்.. கிறீச்.." என்று அதிகப்படியான சத்தம் வர ஆரம்பித்தது. ஓடோடி வந்த நண்பர் சுப்பிரமணியன் லட்சுமியின் தந்தை மகளிடம் இப்படி சொன்னார்:

"எதிர்வீட்டு மாமாவுக்கு இப்போ தொழுகை நேரம். பம்ப் சத்தம் தொழுகைக்கு இடைஞ்சலா இருக்கும். அஞ்சு நிமிஷம் கழிச்சு தண்ணி புடிச்சுக்கலாம்.. வா.."

நமது நாட்டில் இருக்கும் ஆயிரமாயிரம் சுப்பிரமணியன்களுக்காக முஸ்லிம்கள் எதையும் இழக்கலாம். இந்த நல்லவர்களுடன் நம் தொடர்பை வலுப்படுத்திக் கொள்வது முக்கியப் பணியாகும். 

நல்லிணக்கம் குலைந்து விட்டால்.. சமூகத்திலிருந்து அமைதியும் பறிபோய்விடும். அமைதி பறிபோனால்.. முன்னேற்றம் தடைப்பட்டுவிடும்.

இந்நிலையில், மதசார்பற்ற தன்மையில் நம்பிக்கைக் கொண்ட அறிவு ஜீவிகள் அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியப் பணி இதுதான்:

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை கிஞ்சிற்றும் தயக்கமின்றி முஸ்லிம்களுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். அதேபோல, அவர்களது பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் முஸ்லிம்கள் மன இறுக்கங்களிலிருந்து விலகி இயல்பு நிலைக்கு வர முடியும். தங்களது கவனத்தை தேச நிர்மாணப்பணிகளின் பக்கம் திருப்ப முடியும்.

புகழ் பெற்ற இஸ்லாமிய பேரறிஞர் மௌலானா வஹீதுத்தீன் கான் சொன்னது போல, "தேசப் புனரமைப்பு என்பது முஸ்லிம்களை ஒதுக்கியா? அல்லது அவர்களின் பங்களிப்புடனா?"

இந்தக் கேள்விக்கு நமது அரசியல் தலவர்கள், "முஸ்லிம்களின் பங்களிப்புடனேயே தேச நிர்மாணம்!" - என்று உரத்துச் சொல்ல வேண்டும்.

வெறும் அரசியல் முழக்கங்களோ, உணர்ச்சிகரமான உரைகளோ, அலைக்கடல் கூட்டமோ, மைதானங்கள் கொள்ளா மாநாடுகளோ முஸ்லிம்களின் அறிவுபூர்வமான வளர்ச்சிக்கு துணையாகாது. இதற்கு சாட்சியாக ஒரு அரைநூற்றாண்டுக்கும் அதிகமான இந்திய வரலாறு கண் முன் நிற்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

தொலைநோக்குடைய திட்டங்களும், அதை நிறைவேற்றத் துடிப்பான செயல்பாடுகளுமே முஸ்லிம்களுக்கான இன்றைய அவசியம் தேவை!

(இந்தக் கட்டுரை, 1-15 செப்டம்பர் 1999 இல் சமரசம் மாதமிருமுறை இதழில் நான் எழுதியபோது, அன்று பார்த்த அதேநிலைதான் ஒரு 13 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் தொடர்கிறது. கட்சிகள், அமைப்புகள் பெருகியதே தவிர .... இந்த சமூகம் வளர்ச்சியுறாமலிருப்பதையே காண முடிகிறது!)

ஜசகல்லாஹ் கைர் சகோ அக்பர் அலி 

Reference By : http://mrpamaran.blogspot.com/

No comments:

Post a Comment