Monday, February 11, 2013

சினிமா பார்ப்பது இறை கடமை இல்லை நாமே இதுக்கு காரணமாகிட்டோமோ


நான் இதுவரை யாரையும் திட்டி பதிவு போட்டதில்லை
ஆனால் முதன் முறையாக திட்டனும் என்று கோபம் வருகிறது அதுவும் சொந்த சமுதாயத்தை

முட்டாள் சகோதரர்களே என்று (இந்த திட்டுக்கு உரியவர்கள் யார் என்று கடைசி வரிசையில் தெரியும்)

சத்யம் தியேட்டர் பக்கம் போக வேண்டிய வேளை வந்தது போகும் போது பார்த்தால் நிறைய முஸ்லிம்கள் மனைவி குடும்பத்துடன் அதில் எனக்கு பரிசமான முகங்களும் தென்பட்டது  இதில் வாழ்நாளில் சினிமாவே பார்க்காத நபர்களும் அடக்கம்

நான்
"என்னங்க பாய் இந்தப்பக்கம்"

"ஒண்ணுமில்லைங்க பாய் "அப்படி" என்னதான் பாய் அந்த படத்துல இருக்குதுன்னு பார்க்கலாம்னு வந்தேன்"

தலையை சொறிகிறார், முன்பு ஒரு தடவை (சினிமா பார்ப்பது பிழைப்பிலதவர்கள் வேலைன்னு சொன்னவர்  )

இன்னொருவர் "நான் வெளிவர்றதுக்கு முன்னாடியே  பாத்துட்டேன் பாய் இப்போ என்ன என்ன சீன கட் பண்ணி இருக்கான்னு பாக்கலாம்னு வந்தேன்"
(எத்துனை சீன கட் பண்ணுனாலும் என்ன படத்தோட கருவும் அமெரிக்காவுக்கு சோப்பு போடுறதும் போய்விடுமா?)

இந்த படத்த வெளிஇடக்கூடாதுன்னு தானேடா இத்தனை போராட்டம் இத்தனை உழைப்பு இப்போ

நாமே இதுக்கு காரணமாகிட்டோமோ நாமே அதை வளர்த்து விட்டோமோ மனதுக்குள் ஒரு நெருடல்
முதல் வேலையாக அந்த படம் சம்மந்தப்பட்ட இதுவரை பதிந்த நல்ல!கெட்ட அனைத்து பதிவையும் delete பண்ணிவிட்டேன் (அந்த படத்தின் பெயரைக் கூட பதியவில்லை அதைக்கூட விளம்பரம் ஆக்கிவிடுவார்கள் )

சத்யம் தியேட்டர் மட்டும் தானா என்று பார்த்தால் , தேவி தியேட்டர், உட்லன்ஸ் தியேட்டர், ஐநாக்ஸ் தியேட்டர் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் தலைதான் தென்படுகிறது

முஸ்லிம்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் படம் பார்ப்பது இறை கடமை இல்லை
ஆகவே நான் செய்த சாதனை பள்ளிவாசலுக்கு சென்றவர்களையும் சினிமா பார்க்காத வர்களையும் பார்க்க வைத்தது  தனோ!
நான் சொலுவது தப்பாக இருந்தால் கமாண்டில் சொல்லுங்கள்

No comments:

Post a Comment