Tuesday, February 19, 2013

ஒரு இட்லியை கடிக்கும் அளவுக்குக் கூட இவரால் வாயைத் திறக்க முடியாது...!

ஒரு இட்லியை கடிக்கும் அளவுக்குக் கூட இவரால் வாயைத் திறக்க 

முடியாது...!

ஒரு இட்லியை கடிக்கும் அளவுக்குக் கூட இவரால் வாயைத் திறக்கமுடியாது...!

இந்தச்செய்தியை எப்படி எழுதுவது, நகைச்சுவை உணர்வோடா.. சீரியஸாகவா.. இல்லை விழிப்புணர்வுப் பொறுப்போடா என்று எனக்குத் தெரியவில்லை.

எங்கள் அலுவலகத்தில் சில டெக்னிகல் ஊழியர்கள் இருக்கிறார்கள். பல வருடங்களாக அடிக்கடி வட இந்தியா சென்று களப்பணி செய்பவர்கள். அங்கிருந்து கற்று வந்தார்களா? அல்லது இங்கேயே கற்றுக்கொண்டார்களா தெரியவில்லை. போதைக்காக வாயில் போட்டுக்கொள்ளும் சகல விதமான பான் பராக், குட்கா, மாவா போன்ற அனைத்தையும் வகை தொகையில்லாமல் போட்டுக்கொண்டு துப்பித்தள்ளுகிறார்கள்.

தமிழகம், கேரளம் தவிர்த்து வேறெங்கே போனாலும், பேரூந்து, ரயில், விமானம், சாலை, வீடு, விடுதி, அலுவலகம், காலை, மாலை, பணியின் போது, ஓய்வின் போது, தூக்கத்தின் போது கூட.. என நீக்கமற எங்கும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியன் வரை வாயில் பான் போட்டுத் துப்பித் தள்ளிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்தியாவை விட்டு என்னை நாடுகடத்தினால், இந்த ஒரு விஷயத்தை மனதில் நினைத்துக்கொண்டு என் சோகம் மறப்பேன்.

நான் சொல்லவந்த விஷயம் இதுவல்ல. இவ்வாறு செய்தால் புற்று நோய், வாயில் கறை போன்ற பின்விளைவுகள் ஏற்படும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் நான் அறியாத ஒரு செய்தியை சமீபத்தில் அறிந்தேன். அதுதான் தாடை இறுக்கம் (Jaw Locking). இந்தப் பழக்கத்தினால் கீழ்த்தாடை திறக்கும் இடைவெளி குறைந்துவிடுகிறது.

எங்கள் ஊழியர் ஒருவர், வாயைத்திறக்க முடியாமல் சற்று சிரமத்தோடேயே பேசுவார். சாப்பிடும்போது சிரமத்தோடு கொஞ்சமாக திறந்திருக்கும் வாயில் உணவைத் திணிப்பார். அதாவது ஒரு இட்லியை கடிக்கும் அளவுக்குக் கூட அவரால் வாயைத் திறக்கமுடியாது. இட்லியை நசுக்கித்தான் உள்ளே தள்ளவேண்டும். முதலில் நான் ஏதோ அவருக்கு மட்டும் இருக்கும் வேறேதோ உடற்கோளாறு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சமீபத்தில் இன்னொரு ஊழியன் (24 வயது இளைஞன்) சிரித்துக்கொண்டே இதை என்னிடம் விளக்கியபோது அதிர்ச்சியாக இருந்தது.

அப்போது கூட புற்றுநோய் போல யாருக்கோ இப்படி நிகழ்கிறது போல என்று நினைத்த என்னிடம் அவன் கூறினான்.

“அட போங்க சார், அண்ணனுக்கு 15 cm தான் வாயி திறக்கும். இட்லி கூட திங்க முடியாது. அதான் உங்களுக்கு தெரிஞ்சிபோச்சு. எனக்கும்தான் லாக் ஆயிருக்கு. 35 cm. அதான் உங்களுக்கு தெரியல. எனக்கு ஒரு ஆப்பிள் வாங்கிக்கொடுங்களேன். என்னால கடிக்கமுடியாது. 30 cm வந்ததும் நிப்பாட்டிறலாம்னு இருக்கேன். ராஜாவுக்குத் தெரியுமா, இப்பவே 25 cm. ஹிஹி” என்றான்.

15 cm உட்பட இவர்கள் அனைவருமே இன்னும் மாவா போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அடப்பாவிகளா.. பாதிக்கப்பட்ட பின்பு கூட திருந்தமாட்டீர்களா ஐயா?

நன்றி : நெல்லை ராஜன் & ஆதி தாமிரா...

ஒரு இட்லியை கடிக்கும் அளவுக்குக் கூட இவரால் வாயைத் திறக்க 
முடியாது...!

இந்தச்செய்தியை எப்படி எழுதுவது, நகைச்சுவை உணர்வோடா.. சீரியஸாகவா.. இல்லை விழிப்புணர்வுப் பொறுப்போடா என்று எனக்குத் தெரியவில்லை.

இவ்வாறு செய்தால் புற்று நோய், வாயில் கறை போன்ற பின்விளைவுகள் ஏற்படும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் நான் அறியாத ஒரு செய்தியை சமீபத்தில் அறிந்தேன். அதுதான் தாடை இறுக்கம் (Jaw Locking). இந்தப் பழக்கத்தினால் கீழ்த்தாடை திறக்கும் இடைவெளி குறைந்துவிடுகிறது.

எங்கள் ஊழியர் ஒருவர், வாயைத்திறக்க முடியாமல் சற்று சிரமத்தோடேயே பேசுவார். சாப்பிடும்போது சிரமத்தோடு கொஞ்சமாக திறந்திருக்கும் வாயில் உணவைத் திணிப்பார். அதாவது ஒரு இட்லியை கடிக்கும் அளவுக்குக் கூட அவரால் வாயைத் திறக்கமுடியாது. இட்லியை நசுக்கித்தான் உள்ளே தள்ளவேண்டும். முதலில் நான் ஏதோ அவருக்கு மட்டும் இருக்கும் வேறேதோ உடற்கோளாறு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சமீபத்தில் இன்னொரு ஊழியன் (24 வயது இளைஞன்) சிரித்துக்கொண்டே இதை என்னிடம் விளக்கியபோது அதிர்ச்சியாக இருந்தது.

அப்போது கூட புற்றுநோய் போல யாருக்கோ இப்படி நிகழ்கிறது போல என்று நினைத்த என்னிடம் அவன் கூறினான்.

“அட போங்க சார், அண்ணனுக்கு 15 cm தான் வாயி திறக்கும். இட்லி கூட திங்க முடியாது. அதான் உங்களுக்கு தெரிஞ்சிபோச்சு. எனக்கும்தான் லாக் ஆயிருக்கு. 35 cm. அதான் உங்களுக்கு தெரியல. எனக்கு ஒரு ஆப்பிள் வாங்கிக்கொடுங்களேன். என்னால கடிக்கமுடியாது. 30 cm வந்ததும் நிப்பாட்டிறலாம்னு இருக்கேன். ராஜாவுக்குத் தெரியுமா, இப்பவே 25 cm. ஹிஹி” என்றான்.

15 cm உட்பட இவர்கள் அனைவருமே இன்னும் மாவா போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அடப்பாவிகளா.. பாதிக்கப்பட்ட பின்பு கூட திருந்தமாட்டீர்களா ஐயா?
நன்றி : நெல்லை ராஜன் & ஆதி தாமிரா...

No comments:

Post a Comment