Sunday, August 3, 2014

முஸ்லிம்களின் நிலை குறித்து எழுத்தாளர் மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் எழுதிய அருமையான கட்டுரை!
முஸ்லிம்களின் நிலை குறித்து எழுத்தாளர் மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் எழுதிய அருமையான கட்டுரை!

Read more: http://www.adiraipirai.in/2014/08/blog-post_2.html#ixzz3AI3lZZnJஆனந்த விகடனில் மாரி செல்வராஜ் எழுதிவரும் 'மறக்கவே நினைக்கிறேன்' தொடரில் இந்த வாரம், இஸ்லாமியர்கள் குறித்த வலி மிகுந்த பதிவு வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இப்படி தொடங்குகிறார்: 'கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குனரைப் பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப் பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயோன் பென்சில்களைக் கொடுத்து அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம். அப்போது அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100 தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லிவைத்து வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள் தான் அதிர்ச்சிக்குக் காரணம். ஆம், அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி கட்டியவர்களாகக் கூட இருந்தார்கள்.'

இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுச்சமூகத்தின் பார்வைகள், இஸ்லாமியர்களின் மனநிலைகள் என விரியும் கட்டுரையின் ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது இதயம் கனக்கிறது.

குழந்தைகள் வரைந்த 100 தீவிரவாதிகளும் இஸ்லாமியராகவே இருந்தது கண்டு, தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதகாக தோழர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதைப் படிக்கும் எந்த இஸ்லாமியரும் துளிகூட அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் இதை அனுபவப்பூர்வமாக தினம்தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய விடுதலைக்காக வீர மரணமடைந்த திப்பு சுல்தானின் உண்மை வரலாற்றை, 'கற்பனைக் கதை'
என்ற முன்னறிவிப்புடன் தேசிய ஊடகமே ஒளிபரப்பினால் வேறு என்ன நடக்கும்?

ரோஜா முதல் விஸ்வரூபம் வரை திரையில் விரியும் காட்சிகளிலெல்லாம் முஸ்லிம்களை கொத்திக் குதறினால் வேறு என்ன நடக்கும்?

எங்கே குண்டுவெடிப்பு நடந்தாலும் காவல்துறையின் விசாரணைக்கு முன்னரே, ஊடகங்கள் முந்திக்கொண்டு இந்தியன் முஜாஹிதீனை நோக்கி கைநீட்டினால் வேறு என்ன நடக்கும்?

அதிரை தமீம் அன்சாரி, பயங்கரவாதி என்று சொல்லி கைது செய்யப்பட்டபோது முதல்பக்க செய்தி வெளியிட்டவர்கள், அவர் குற்றமற்றவராக விடுதலையானதை கடைசிப் பக்கத்தின் கடைசி வரியில்கூட சொல்லாமல் விட்டால் வேறு என்ன நடக்கும்?

விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு படம்பிடித்து பரபரப்பை பற்ற்வைத்தவர்கள், அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்களை இருட்டடிப்பு செய்தால் வேறு என்ன நடக்கும்?

முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் தொடரும் வரை இதுதான் நடக்கும்.

சிறுபான்மை முஸ்லிம்களைப் பற்றிய நல்ல பதிவைச் செய்யும் மாரி செல்வராஜ் போன்ற மாந்தநேயர்கள், ஊடகங்களில் சிறுபான்மையினராக இருக்கும் வரை இதுதான் நடக்கும்.

மாரி செல்வராஜுக்கும், விகடனுக்கும் இதய நன்றி!

Read more: http://www.adiraipirai.in/2014/08/blog-post_2.html#ixzz3AI3SBGtm

1 comment:

  1. Merkur Futur - Chrome Finish, Matte Black (3/4) - Deccasino
    Merkur Futur. Made with Merkur's classic design, this deccasino one is a chrome febcasino finished, finished 3-piece safety razor with a slanting 제왕카지노 head.

    ReplyDelete