Wednesday, March 6, 2013

ஆண்களுக்குகான கடமையான குளிப்பு குளிப்பது எப்படி?

ஆண்களுக்குகான கடமையான குளிப்பு குளிப்பது எப்படி?



*ஆண்களுக்குகான கடமையான குளிப்பு 
1.விந்து வெளிப்படல்(
தூக்கத்தில் உச்சத்தை அடைதல்),2.உடலுறவு (மனைவியுடன் இல்லறத்தில் சேருதல்)

*பெண்களுக்குகான கடமையான குளிப்பு
1)மாதவிடாய், 2)பிரசவ
(நிஃபாஸ்),3)உடலுறவு(கணவனுடன் இல்லறத்தில் சேருதல்),4)தூக்கத்தில் உச்சத்தை அடைதல்

*ஆண் பெண் இருவருக்கும் பொதுவான குளிப்பு கடமை
1)இஸ்லாத்தை ஏற்கும் போதும் 2)முர்சையற்ற நிலை, பைத்தியம் ஆகியவற்றில் இருந்து மீளும் போதும்
மேற்கூறிய காரணங்களினால் குளிப்புக் கடமையாவது நாமனைவரும் அறிந்ததே.
எவ்வாறு அக்குளிப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முறையையும் நபிகளார் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
இதில் முதலில் ஆண்களுக்குகான உடலுறவு மற்றும் ஸ்கலிதம் போன்ற நிலைகளால் விந்து வெளிப்படல் போன்ற காரணங்களால் குளிப்புக் கடமையான ஆண்கள் குளிப்பதற்கான முறை பற்றி இங்கே பார்ப்போம்.
சுன்னத்தான குளிப்பு:
நபி(ஸல்) அவர்கள் பெருந்துடக்கின் காரணத்தாலும், வெள்ளிக் கிழமை தினத்தன்றும், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டதற்காகவும், மைய்யித்தைக் குளிப்பாட்டிய காரணத்தாலும் ஆக, நான்கு காரியங்களுக்காகக் குளித்து வந்தார்கள்' அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) (நூல் - அபூ தாவூது). இது இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டு 'ஸஹீஹ்' எனும் தரத்தில் உள்ளது.

இச்சை நீர் (மதி)வெளிப்பட்டால் குளிப்பு கடமையா? 
“இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், தாரமீ
 மனக்குழப்பம்:-
இதுவல்லாது சில ஆண்களுக்கு வெட்ட சூடு இருக்கும். சிறுநீர் கழிக்கும் முன்போ அல்லது மலம் கழிக்கும் நேரத்திலும் வெளியாகும் இதுவும் ஒரு வகை நோயே, இதற்கு தகுந்த மருத்துவர்கள் இடம் சென்று ஆலோசனை பெற்று குணமடையலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் குறிப்பே இதற்கும் போதுமானதாகு

எப்போது குளிப்பு கடமையாகிறது?
'இந்திரியம் வெளிப்படுவதால் குளிப்பு கடமையாகிறது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல் - புகாரீ, முஸ்லிம்). 
உடலுறவு கொண்டாலே குளிப்பு கடமையா?
நபி (ஸல்) அவர்களின் ஆரம்பகால (ஏகத்துவ) இஸ்லாமிய எழுச்சி பணியின் போது விந்து(இந்திரியம்) வெளிப்பட்டால் குளிப்பு கடமையாயிருந்தது,பின்பு உடலுறவின் போது விந்து வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும் குளித்தாக வேண்டுமென கட்டளையிட்டுள்ளார்கள்.(அறிவிப்பாளர் : உபை பின் கஅபு (ரலி) நூல்கள் - திர்மிதி, அபூதாவுத்)
 
2,குளிப்புக் கடமையானவர் செயக்கூடாதவைகள்:-
'குளிப்புக் கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பள்ளிக்கு தொழவருவதை நான் அனுமதிக்க மாட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பாளர்; ஆயிஷா(ரலி);அவர்கள் (நூல் - அபூ தாவூது).

குளிப்புக் கடமை நீங்க 
1.முழு உடம்பும் நனையும் அளவில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அவரது குளிப்புக் கடமை நீங்கி விடும். அதன் மூலம் அவருக்குத் தொழவும் முடியும். குளிப்புக் கடமை நீங்குவதற்கு முன்னால் வுழூச் செய்தே ஆகவேண்டும் என்ற கடமையோ வலது புறத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கடமையோ மர்மஸ்தான உருப்பைத் தனியாகக் கழுவவேண்டும் என்ற நிபந்தனையோ கிடையாது. முழு உடம்பையும் தண்ணீர் நனைத்தாலே குளிப்புக் கடமை நீங்கி விடும்
எப்படி குளிக்க வேண்டும்? 
‘என்னிடத்தில் ஜாபிர் ரழியல்லாஹ் அன்ஹ் கூறினார்கள் ‘உன் தந்தையின் சகோதரர் மகனான முஹம்மத் இப்னுல் ஹனபியா என்னிடத்தில் கடமையான குளிப்பு எப்படி எனக் கேட்டார். நபியவர்கள் 3 கையளவு கொள்ளக் கூடிய தண்ணீர் எடுத்து அதைத் தங்கள் தலையில் ஊற்றுவார்கள்இ பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் எனக் கூறினேன்.” அப்போது ‘நான் அதிகமான முடியுடையவனாக இருக்கிறேனே?” என ஹஸன் அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்” என நான் (ஜாபிர்) கூறினேன்.அறிவிப்பவர்: அபு ஜஃபர் ஆதாரம்:புகாரி:256
எவ்வளவு தண்ணீர் 
நபியவர்கள் ஒரு ஸாவு தண்ணீரில் பெருந்தொடக்கிற்காகக் குளித்து
விடுவார்கள். ஒரு முத்து தண்ணீரில் வுழூச் செய்து விடுவார்கள்” என ஸபீனா
ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம் : முஸ்லிம் 543
எனவே கடமையான குளிப்பின் போது ஆணாயினும் பெண்ணாயினும் முழு 
உடலும் நனையும் அளவில் தலையிலும் உடலிலும் தண்ணீர்ஊற்றிக்
கொள்வதே அவர்கள் சுத்தமாகிவிடப் போதுமானதாகும் என்பது
வெள்ளிடைமழை.
 நிர்வாணமாக குளிக்கலாமா?
உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன்அந்தரங்கப் 
பகுதியை பாதுகாத்துக் கொள் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர்
சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.(அப்போது சில
பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும்
பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும்
பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில்
ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட
அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதி வாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவுத் (3501)

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் ஒரேபாத்திரத்தில் உள்ள  தண்ணிரில் குளிக்கலாமா?
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே தண்ணீர் பாத்திரத்தில் (ஒரே நேரத்தில்) கடமையான குளிப்பை குளித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் மாறிமாறி (அப்பாத்திரத்தில்) போய் வந்து கொண்டிருந்தன' (நூல்கள் : புஹாரீ, முஸ்லிம்).இப்னு ஹிப்பானில் 'எங்களது கைகள் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டுமிருந்தது' என்ற குறிப்பு கூடுதலாக அதில் பதியப் பெற்றுள்ளது.

சுன்னத்தான குளியல் முறை 
மேலே சொல்லப்பட்ட முறை ஒருவர் ஜனாபத்திலிருந்து சுத்தமாவதற்கான நிபந்தனையாகும். அதனையே நபியவர்கள் குளிப்பு பற்றி வினபுவர்களுக்குப் பதிலாகவும் கூறினார்கள். ஆனாலும் நபியவர்கள் குளிக்கும் போது அதிகமான நேரங்களில் அவரது குளிப்பு பற்றி இதைவிடப் பல கூடுதலான அம்சங்கள் பல ஆதாரப் பூர்வமான செய்திகளில் வந்துள்ளன. பின்வருமாறு அவைகளை வரிசைப்படுத்தலாம்
1.வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி தமது இருகைகளையும் கழுவி பின்னர் மர்மஸ்தானத்தைக் கழுவுதல்.
2.இடது கையை சுவரில் அல்லது நிலத்தில் தேய்த்துச் சுத்தப்படுத்தல் மறுபடி அக்கையைக் கழுவுதல்
3.தொழுகைக்காக செய்யும் வுழூவைப் போன்று வுழூச் செய்தல்.இதன் போது உருப்புக்களை ஒரு முறையோ மூன்று முறையோ கழுவலாம்.
4.சில சமயங்களில் மேற்சொன்ன வுழூவின்போது காலை மாத்திரம் கழுவாமல் குளிப்பின் பின் கழுவுதல்.
5. பின் தண்ணீரின் மூலம் தலையைக் கோதிக் கழுவுதல்.
6.அதன் பின்னர் தலையின் மீது ஆகக் குறைந்தது 3 முறை தண்ணீரை ஊற்றிக் குளித்தல். சில அறிவிப்புக்களில் தலையின் வலது பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள் என்றும் வந்துள்ளது.
7.குளிப்பின் பின் நபியவர்கள் எப்பொழுதும் வுழூச் செய்யவில்லை.
மேற் சொன்ன அனைத்து முறையும் புகாரி மற்றும் முஸ்லிமில் சுத்தம் பற்றிய பாடத்தில் குளிப்பு என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டவைகள். எனவே குளிப்பை இந்த வடிவிலே நபியவர்கள் அதிகமாகச் செய்துள்ளதால் இதையே நாம் கூடுதலாகச் செய்ய சிரத்தை எடுக்க வேண்டும். 
விரைவில்: 
பெண்களுக்குகான கடமையான குளிப்பு குளிப்பது எப்படி?

No comments:

Post a Comment