Wednesday, March 20, 2013

“தாடிக்குத் தடை” “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை”:- சமவுரிமை மாத இதழ்


சமவுரிமை மாத இதழ்

“தாடிக்குத் தடை” “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ்  அல்ஹம்து லில்லாஹ்.
“ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற நபி வழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது.
தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் செய்திகளை படம் போட்டுக் காட்டும் என நம்பலாம்.
முதல் இதழே முதன்மையான இதழாக விளங்குகிறது. இது சமுதாயத்துக்குத் தேவையான சமவுரிமைகளைப் பெற்றுத் தந்து வாசகர்களின் இதயங்களிலே நடுபீடத்தில் குடியேற நெஞ்சாற வாழ்த்துகிறேன்.
வானவில் போல அழகாகத் தோன்றி மறையாமல் நல்லவைகளை நிலவுபோலக் குளுமைப் படுத்தி – அல்லவைகளைச் சூரியனைப் போல சுட்டெரித்து ஊடக வானில் என்றென்றும் புகழுடன் நிலைத்திருக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறேன். இதயம் குளிந்து வாழ்த்துகிறேன்.
ஆக்கம் :முதுவைக் கவிஞர்
மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

நன்றி முதுகுளத்தூர்.காம்

Posted by  on August 1, 2009 in நூல் அறிமுகங்கள்
://mudukulathur.com/?p=90

No comments:

Post a Comment