Saturday, June 4, 2022


நகம் கடிப்பதால் உயிருக்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்! நாம் நகம் கடிப்பதால், உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். முறையான உடல் மற்றும் மனநல சிகிச்சை அளிக்காமல் இருந்தால் உங்களுக்கு செப்சிஸ் தொற்று, செப்டிக் ஷாக் என்னும் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாகும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்தப் பழக்கத்தை 'ஆனிசோபேஜியா’ 'Onychophagia’ எனக் குறிப்பிடுகிறது ஆங்கில மருத்துவம்.

பாதிப்புகள் :-
 
1) பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலிமையிழக்கச் செய்துவிடும் தெரியுமா?.

2) நகம் கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் தெரியுமா?.

3) தொடர்ந்து நகத்தை கடித்துக்கொண்டே இருப்பதால் நகக்கண்ணில் நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும் என்பது தெரியுமா?.

4) நகம் கடித்து அந்த இடத்தில் ஏற்படும் உணர்வு காரணமாக சிறு விஷயமாக இருந்தாலும் கோபப்பட்டு ரத்த சுழட்சி அதிகமாகி BP நோய் விரைவாக வந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

 



இந்தப் பழக்கத்தைக் கைவிட:-
முதல் படி, நீங்கள் விழிப்போடு இருப்பது. இப்படியான ஒரு பழக்கம் நம் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய விழிப்புணர்வோடு இருந்தால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்க முடியும்.
 
கவனம்:-
ஒரு செயலில் ஈடுபடும்போது அதை அதிக கவனத்தோடு செய்யவேண்டியது அவசியம். அதே நேரத்தில், தன்னிலை மறக்கும் அளவுக்கு எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சுத்தம்:-
நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வெறுப்பு:-
கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தேய்த்துக்கொள்ளளுங்கள். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி அந்தப் பிரச்னையிலிருந்து வெளிவர உதவும்.

பராமரிப்பு :-
வாரத்துக்கு ஒருமுறை நகப் பராமரிப்பு 'மேனிக்யூர்' (Manicure) செய்துகொள்ளலாம். முடியாதவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு விரல்களில் பேண்டேஜ் மாதிரி எதையாவது சுற்றிக்கொள்ளலாம்.

மறக்கடிக்க :-
பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை. கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.

சூழல் கவனம்:-
கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு... என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

உணவு :-
உடலுக்கு  கால்சியம் தரக்கூடிய அனைத்து உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் இந்த பழக்கத்திலிருந்து விடுபட உதவும்

பெற்றோர்களின் பங்கு:-
# மன அழுத்தத்தையும், இறுக்கமான சூழலையும் உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகக்கூடும்.
# பெற்றோர் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்கங்களையும், நகம் கடிப்பதால் ஏற்படும் தீமைகளையும் சொல்லிக் கொடுக்கலாம்.
# நகத்தைக் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு மாற்றாக வேறென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.
# அவர்களை தினமும் மாலை நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்கவும்.

அப்போதும் முடியவில்லையென்றால் மருத்துவரை சந்தியுங்கள்:-
ஒருவரின் நகத்தைவைத்தே அவருக்கு உடலில் என்ன பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட நகத்தைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்! என்ன செய்தும் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பவர்கள், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.’

"துணியைக்கொண்டு பற்களை சுத்தம் செய்வதையும், பற்களைக்கொண்டு நகத்தை சுத்தம் செய்வதையும் நபியவர்கள் வெறுத்தார்கள்" என்ற நபி மொழி யை இங்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.