Thursday, March 7, 2013

உங்கள் குழந்தை விரல் சூப்புகிறதா...

 உங்கள் குழந்தை விரல் சூப்புகிறதா...


குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயற்க்கைதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டாலும் குழந்தைகள் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும்.

ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது அது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன.தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது.

பொதுவாக விரல் சூப்பும் பழக்கம் இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கிறது. மூன்று வயது வரை இந்தப் பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை.பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும்.

ஆறு வயதிற்கு மேல் குழந்தையின் பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் முளைக்கத் துவங்கும். இக்காலத்தில் குழந்தைகள் விரல் சூப்பினால் பற்கள் மற்றும் மேல் தாடை பகுதி தூக்கலாக வளர துவங்கும். பற்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படும். இதனால் மற்ற குழந்தைகளைப் போல் பற்கள் இல்லாமல் தனக்கு மட்டும் பற்கள் தூக்கலாக இருக்கிறதே என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இக்குழந்தைகளுக்கு பற்கள் சீராக இல்லாதிருப்பதால் பேச்சிலும் தெளிவு இல்லாமல் இருக்கும்.

விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?

*விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்றவைகளை செய்யலாம்.

* சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும். இந்நிலையில் பெற்றோர் விரல்களை எடுத்து விட வேண்டும்.குழந்தைகளை அடித்து துண்புறுத்தி இந்த பழக்கத்தை விடுவிக்க முயற்ச்சி செய்யக்கூடாது.

*பல் மருத்துவரிடம் அழைத்து சென்றால் [Habit breaking appliance] பொருத்துவர்கள்.

No comments:

Post a Comment