Saturday, February 23, 2013

ஹைதரபாத் குண்டு வெடிப்பு ! விடை தெரியாத கேள்விகள் .....?

.

ஹைதராபாத் குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தும் 115 பேர் காயமடைந்தும் உள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படும் நிலையில், இவற்றின் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

1) ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் விபரம், காவல்துறைக்கு மட்டுமே அறிந்த ரகசியம். கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்திருப்பதோடு, குண்டுவெடிப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும் வாய்ப்பை ஏன் நழுவவிட்டது காவல்துறை. பாதுகாப்பு கேமராக்களுக்கே பாதுகாப்பு இல்லாமலும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்காமலும்தான் உள்நாட்டு பாதுகாப்பின் லட்சணம் உள்ளதா? காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது எப்படி? காவல்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளின் துணையின்றி நிச்சயமாக இது சாத்தியமில்லை. எனவே, நடத்தப்படும் விசாரணையின் முதல் கட்டமே இந்தக் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாடு கைவசம் வைத்திருந்த காவல்துறையினரிடமிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.

2) ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பின்னரும் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், இதுவரை அப்படி எந்தவொரு அமைப்பும் இந்தக் குண்டுவெடிப்பில் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்திய முஜாஹிதீன் என்ற அமைப்பே காரணம் என்று சில ஊடகங்கள் செய்தி பரப்புகின்றன. ஒரு வாதத்திற்காக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பாகிஸ்தானிலிருந்து செயல்படுவதாகக் கொண்டாலும், இதுவரை இந்தக் குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பேற்காமலிருப்பது ஏன்? முன்னர் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் உடனடியாகவே ஏதாவது ஒரு இமெயில் அல்லது கடிதம் காவல்துறைக்குக் கிடைக்கும். தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரங்களுக்குள்ளேயே ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம்கள் கைது செய்யப்படுவர். அவையெல்லாம் காவி தீவிரவாதத்தின் சதிவேலைகள்தான் என்பது உளவுத்துறையினரால் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தமுறை அத்தகைய இமெயில், கடிதம் போன்ற துப்புக்கெட்ட துப்புகள் ஏதும் கிடைக்காதது ஏன்?

3) இந்திய முஜாஹிதீன் என்ற அமைப்பின் அலுவலகம் எதுவென்று அறிவிக்கக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் கேரோ செய்தததும் நினைவிருக்கலாம். மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்ததைப் போன்று ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இருக்கும் பயங்கரவாத பயிற்சி முகாம்களைப் போன்று இந்திய முஜாஹிதீனுக்கு வெளிப்படையான அலுவலகமோ அல்லது பயிற்சி முகாமோ இருப்பதற்கான எத்தகைய ஆதாரங்களும் அரசுவசம் இல்லாத நிலையில் எங்கிருக்கிறது என்றே அறியப்படாத இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரை மீண்டும் மீண்டும் ஊடகங்கள் முன்னிறுத்துவதன் மர்மம் என்ன?

4) குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே தினத்தில், காஷ்மீரில் பேரணி நடத்தச்சென்ற தொகாடியாவுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியானது. முன்னதாக, ஹைதராபாத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று மதவெறி வன்முறையைத் தூண்டும்படி இவர் பேசினார். இக்குண்டுவெடிப்புகளுக்கும் மேற்கண்ட சம்பவங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பிருக்குமா? ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை நிறுவுவதற்காக, அந்நேரத்தில் தான் காஷ்மீரில் இருந்ததாக அலிபி தயாரிக்கத்தான் தொகாடியா காஷ்மீர் சென்றாரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படணும்தானே?

5) டெல்லியில் கைது செய்யப் பட்டுள்ள இருவர், குண்டு வெடிப்பு நடத்த தில்சுக் நகரை வேவு பார்த்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், குறைந்த பட்சம் சுமார் இரு வருடங்களுக்காவது தில்சுக் நகர் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தி இருக்க வேண்டாமா? 

6) அதே நேரத்தில், இந்திய முஜாகிதீன் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்பட்ட தில்சுக் நகரில் குண்டு வெடிப்பை நிகழ்த்துவதன் மூலம், அந்தப் பழி இந்தியன் முஜாஹிதீன்மீது விழுவதை, காவி தீவிரவாத அமைப்புகள் உட்படயுள்ள மற்ற தீவிரவாத அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு இருக்கலாமே?

7) பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் கூறியதுபோல், இக்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவாத வெறுப்பு பேச்சுகளுக்குத் தொடர்பிருக்க வாய்ப்புகளிருப்பின் ஒவைசியின் பேச்சுகளைவிட தொகாடியாவின் பேச்சுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும், தொகாடியாவைக் காப்பாற்றும் வகையில் ஒருசார்பாக சுஷ்மா ஸ்வராஜ் பேசுவதையும் கருத்தில் கொண்டு புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டால், இதன் பின்னணியில் மதவாத சக்திகளின் தொடர்புகள் இருப்பின் தெரியவருமே!

8) சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளால் பெரிதும் பலனடையப்போவது அமெரிக்காவே. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளால் பலவீனப்பட்டுள்ள காங்கிரஸுக்கு உதவும் வகையிலும், மக்களவை உறுப்பினர்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் அந்நிய சக்திகளின் கைங்கர்யம் இருக்கவும் வாய்ப்புள்ளதே!

9) தெலுங்கானா தனிமாநிலம் கோரியும், அதன் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும் தெலுங்கானா ஆதரவு கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசு தெலுங்கானா பிரச்சனையில் முடிவெடுக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளில் நம்பிக்கை இழந்த 'செம்புலிகள்' எனும் அமைப்பு ஆயுத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்தக் குண்டுவெடிப்புகளில் அவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் ஏன் திரும்பவில்லை?

10) தமிழக எல்லையோரமுள்ள நெல்லூரில் சமீபத்தில் 60,000 ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் ரகசியமாகக் கூடி, பயிற்சி முகாம் நடத்திய செய்திகள் உள்ளூர் ஊடகங்கள் தவிர வேறு எந்த ஊடங்களிலும் வெளியாகவில்லை. ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று சங் பரிவாரங்கள் வெளிப்படையாகவே மிரட்டியுள்ள நிலையில், இத்தகைய பயிற்சி முகாம்கள் ஏன் கண்காணிக்கப்படவில்லை?

11) மாலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் முதலான அநேக குண்டுவெடிப்புகளில் முதலில் சந்தேகிக்கப்பட்டதுபோல் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பில்லை என்றும் அவற்றைத் திட்டமிட்டு நடத்திய காவி இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளே என்பது நிரூபணமாகியதோடு, ஷிண்டே - ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வெளியிட்ட பின்னரும், பாஜகவின் மிரட்டலுக்குப் பயந்து தனது கருத்துக்காக மன்னிப்பு கோரினார். ஷிண்டேவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பதும் பாஜகவின் கோரிக்கையாக இருந்த நிலையில், அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பாஜகவேகூட ஏன் இந்தக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திருக்கக்கூடாது?

பெரும்பாலான குண்டுவெடிப்புகளின் பலன்கள் பாஜகவுக்கும், நெருக்கடியிலிருக்கும் ஆளுங்கட்சிக்குமே சாதகமாக இருப்பதால் வழக்கம்போல் ஒருசிலரைக் கைதுசெய்துவிட்டு, கமுக்கமாக அரசின் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் யுக்தியாக இந்தக் குண்டுவெடிப்புகளிலும் அதற்கான சாத்தியம் இல்லாமலில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

எது எப்படியிருந்தாலும் இவ்வாறு நடத்தப்படும் குண்டுவெடிப்புகளின் பின்னணி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ அல்லது இனத்துக்கோ நன்மை பயக்கவேண்டும் என்ற திட்டத்தில் நடத்தப்படுவது இல்லை என்பது மட்டும் உறுதி. நடத்தப்படும் குண்டுவெடிப்புகளால் இழப்பு என்பது அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த பொதுமக்களுக்கே! எனவே, இவற்றின் பின்னணியிலுள்ள பயங்கரவாதிகள், சாதாரண பொதுமக்களின் நன்மைக்காக இம்மாபாதக செயலைச் செய்வதில்லை என்பது வெள்ளிடை மலை!

அதே சமயம் இத்தகைய குண்டுவெடிப்புகள் மூலம் மக்கள் மனதில் விதைக்கப்படும் இனப்பிளவினால் பிறக்கும் ஓட்டுகள், விலைவாசி உயர்வினால் நிமிடத்துக்கு நிமிடம் செத்துக்கொண்டிருக்கும் சாதாரண மக்களின் மனதில் தோன்றும் அரசுகளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வினை மழுங்கடித்தல்/மறக்கடித்தல், நாட்டைக் காவுகொள்ளும் பயங்கரமிருகமான ஊழலுக்கு எதிரான மக்களின் எண்ணங்களை நீர்த்துப்போக செய்தல் முதலிய எண்ணற்ற நன்மைகள் இந்நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்தும் கேவலமான அரசியல்வியாதிகளுக்குத்தான் என்பது அசைக்கமுடியாத உண்மை! அதிகாரம், பலம், பணம் என அனைத்தையும் கைவசம் வைத்திருக்கும் பயங்கரவாத ஜந்துக்களாலேயே இத்தகைய திட்டமிட்டச் சதிச் செயல்களை வெற்றிகரமாக நடத்தமுடியுமென்பதும் யோசிப்பவர்களுக்கு நன்கு விளங்கும் விசயம்.

இந்நாட்டில் நீதித்துறை என்ற ஒன்று சரியாக இயங்குமானால், மேற்கண்ட அடிப்படை உண்மையினை மையமாக வைத்து இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியிலுள்ள தீய சக்திகளைச் சட்டத்தின் முன்னிலையில் கொண்டுவருதற்கான நீதிபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே இந்நாட்டின் சாதாரண குடிமக்களின் எதிர்பார்ப்பாகும்!

- எழில் பிரகாசம் ( இந்நேரம் )

1 comment:

  1. இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையால் கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம் - இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் அதிரடி அறிவிப்பு.........!!

    இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த பத்து நிமிடங்களில் குண்டுவெடிப்பிற்கு காரணம் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் என்று உளவுத்துறையும், ஊடகத்துறையும் கூறிவந்தது,

    ஒவ்வொரு முறையும் நாமும், நம்முடைய தளத்தில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் என்பது கற்பனையாக உருவாக்கப்பட்டது என்று பலமுறை கூறியுள்ளோம்,

    இந்நிலையில் ஹைதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டே கட்ஜு அவர்களிடம் கேட்கப்பட்ட போது இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையால் கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம் என்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் 99 சதவீதம் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளார்.
    Thanks to Sangai Rizwan's page :) ...

    ReplyDelete