Friday, February 22, 2013

இஸ்லாத்தைத் தழுவிய ஜெயன் செம்ப் (ஆமினா ) ஒரு முன்மாதிரிப் பெண்மணி

.
*****மாஷா அல்லாஹ் முன்மாதிரிப் பெண்மணி *****
  
ஜெயன் செம்ப் (ஆமினா ) 
வயது: 28 

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை "ஆமினா'வாக மாற்றிக்கொண்ட ஜெய்ன் செம்ப் பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் சமூக ஒத்துழைப்பு போலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.

கடமையின்போது கூட ஹிஜாப் அணிந்து வீதியில் வலம்வரும் இவர், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் செல்ல வேண்டும் என்பதற்காக மேலதிக நேரங்களிலும் பணியாற்றுகிறார். 

"டுவிட்டர்' இணையத்தளம் மூலமõக முஸ்லிம்களோடு கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்ட போதே தனக்கு இஸ்லாம் அறிமுகமானதாகக் குறிப்பிடும் ஜெய்ன் செம்ப் உள்ளூர் பள்ளிவாசல் ஒன்றின் "டுவிட்டர்' கணக்கை நிர்வகிக்கும் முஹம்மது மன்சூர் என்பவரே இஸ்லாம் பற்றி தனக்கு அதிகம் தெரிந்துகொள்ள உதவியவர் என்றும் குறிப்பிடுகிறார்.

இனி இஸ்லாம் பற்றி ஜெய்ன் சொல்வதைக் கேளுங்கள்.

இஸ்லாம் பெண்களை "சமையலறை அடிமைகளாகவே' வைத்திருக்கிறது என்றே நான் முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதுதான் இஸ்லாம் எந்தளவு தூரம் சகிப்புத் தன்மை உடையது, மற்றவர்களுக்கு மதிப்பளிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

எனது கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய வேறு எந்தவொரு சமயத்தையும் என்னால் அந்தத் தருணத்தில் காண முடியவில்லை. இஸ்லாத்தைத் தவிர அதனால்தான் இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பினால் நான் காதலில் வீழ்ந்துவிட்டேன். நான் இஸ்லாத்தை எனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கெண்டுள்ள போதிலும் எனது குடும்பத்தினரும் சக பணியாளர்களும் என்னை விட்டும் பிரிந்து சென்று விடவில்லை. எனது கணவரும் இரு பிள்ளைகளும் கத்தோலிக்கர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவவேண்டும் என்று நான் ஒருபோதும் நிர்ப்பந்திக்கப்போவதில்லை.

நான் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து எனது குடும்பத்தினர், உறவினர்கள் சந்தோஷமடைகிறார்கள். நான் ஹிஜாப் அணிந்தே பொலிஸ் கடமையை ஆற்றுகிறேன். இது எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு புது அனுபவம். பொலிஸில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்கள் கடமையின் போது "ஹிஜாப்' அணிவது குறித்த ஒழுங்கு விதிகள் சிலவற்றை நான் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் என்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறிக்கொள்வதன் மூலமாக முஸ்லிம் பெண்கள் பொலிஸில் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம் இஸ்லாம் தொடர்பான தவறான அபிப்பிராயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணுகிறேன்.

நன்றி:- இணையம்

No comments:

Post a Comment