Sunday, January 27, 2013

ஒரு மாற்று மத சகோதரரின் பார்வையில்...இஸ்லாமியன் (விடியோ இணைப்பு)

                ஒரு மாற்று மத சகோதரரின் பார்வையில்...இஸ்லாமியர் 


விஸ்வரூபம் எடுத்த இஸ்லாமியர்களும் , கருத்து சுதந்திரம் எனும் கேலிக்கூத்தும்

நான் ஒரு முறை ஓர் இஸ்லாமிய மருந்து கடையில் சில பொருட்கள் வாங்கினேன். வாங்கி விட்டு , வீட்டுக்கு போய் விட்டேன். இதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. அந்த கடை எனக்கு தெரிந்த கடை அன்று. தற்செயலாக என் கண்ணில் பட்டதால் , அந்த கடையில் நுழைந்தேன் . அவ்வள்வுதான். அந்த கடை பெயரைக்கூட நினைவில் கொள்ளவில்லை.

சில நாட்கள் கழித்து அதே மருந்து தேவைப்பட்டது. வேறு கடைகளில் கிடைக்காததால் , அதே இஸ்லாமிய கடைக்கு சென்றேன். அந்த கடையின் லொக்கேஷன் மறந்து விட்டது. கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடித்தான் அந்த கடைக்கு சென்றேன்.

தேவையானதை வாங்கி விட்டு , காசை நீட்டினேன். கவுண்டரில் இருந்தவர் என்னை சில உற்று பார்த்து விட்டு , “ போன வாரம் இதே மருந்தை எங்களிடம் வாங்கினீர்கள் அல்லவா “ என்று கேட்டார்.

எனக்கு ஆச்சர்யம் .. எனக்கு அவர் முகம் நினைவு இல்லை. ஆனால் அவர் என்னை நினைவு வைத்து இருக்கிறாரே.. சரி, நான் யாராக இருந்தால் என்ன ,,ஏன் என்னை விசாரிக்கிறார்.

” அனத் மருந்துடன் சேர்த்து , இன்னொரு பொருளை கேட்டீர்கள். நான் அது வருவது இல்லை என சொன்னேன்.. நினைவு வருகிறதா ? “ என்றார்.

“ ஆமா சார்,, நான் தான் அது ..ஏன் கேட்கிறீர்கள் “ என்றேன்.

” போன முறை ஐனூறு ரூபாய் கொடுத்து விட்டு , மீதியை வாங்காமல் சென்று விட்டீர்கள் .. அந்த மீதி காசை தனியாக எடுத்து வைத்து உங்களுக்காக காத்து இருக்கிறேன். இன்றும் நீங்கள் வரவில்லை என்றால் , அந்த காசை தானம் செய்து விடலாம் என இருந்தேன். நல்ல வேளை வந்து விட்டீர்கள். “ என சொல்லொயபடி , தனியாக எடுத்து வைத்து இருந்த மீதி காசை , பத்து பைசா கூட குறையில்லாமல் கொடுத்தார்.

எனக்கே அப்போதுதான் நினைவு வந்தது. காசு எப்படி குறைகிறது என குழம்ப்பி , பிறகு கை விட்டு விட்டேன். இவர் நினைவு வைத்து கொடுக்கிறாரே.

“ எங்கள் மார்க்கம் மற்றவர்கள் காசுக்கு ஆசைப்படக்கூடாது என சொல்லித்தந்து இருக்கிறது. எனவேதான் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறேன் “ என்றார்.

எனக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

அன்றில் இருந்து நான் பெரும்பாலும் இஸ்லாமிய கடைகளையே prefer செய்கிறேன். ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு தேவையான பொருட்களை இஸ்லாமிய கடைகளில்தான் பெரும்பாலும் வாங்குகிறேன்.

நான் சொல்ல வருவது அதுவல்ல.

ஒரு கொள்கை அடிப்படையில் வாழும் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழும் மண் இது, இங்கு வெளி வரும் படங்களில் இஸ்லாமியர்களை எப்படி சித்திரிக்கின்றனர் என சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் . அதைப்பற்றியும் நான் சொல்ல வரவில்லை.

அமைதியாக இருந்த இஸ்லாமியர்கள் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து , ஜன நாயக ரீதியில் கமல் படத்துக்கு எதிர்ப்பை காட்டினார்கள் . இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் வீறு கொண்டு எழுவதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

நான் முன்பே சொன்னது போல , நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள் என பல முகமூடிகள் இருந்தாலும் , அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான்.

இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.

ஆளாளுக்கு இஸ்லாமியர்களுக்கு அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள்.
இஸ்லாமியராக பிறந்து , இஸ்லாமுக்கு எதிராக கருத்து சொன்னால் முற்போக்கு முத்திரையும் , ஊடக வெளிச்சமும் கிடைக்கும் என கணக்கிட்டு , இஸ்லாமியர்கள் சிலரும்கூட இந்த அட்வைஸ் ஜோதியில் கலந்தது தனிக்கதை.

இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிராக இவர்கள் சொல்லும் கருத்துகளில் இருக்கும் அபத்தங்களை பார்க்கலாம்.

**************************************************
ஒரு படம் சென்சாரில் அனுமதி பெற்ற பிறகு அதை எதிர்ப்பது தவறு. சென்சார் உறுப்பினர்கள் பலவற்றையும் யோசித்துதான் ஓகே சொல்வார்கள் . அதன் பின் எதிர்ப்பது தவறு. இது கருத்து சுதந்திரக்கு எதிரானது .

சென்சார் என்பதைத்தாண்டி , வெகுஜன உணர்வுகளின் அடிப்படையில் எதிர்ப்புகள் ஏற்கப்பட்டுள்ளன.
ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
கமல் நடித்த சண்டியர் படத்தின் பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.
எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது.

சொல்லிக்கொண்டே போகலாம். யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான். அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.

இஸ்லாமியர்களுக்கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள். இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள்.

யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே.. இன்னொன்றும் பார்க்க வேண்டும் . கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது . சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை.

எங்கள் மதத்தை சார்ந்தவனை வில்லனாக காட்டகூடாது என எல்லா மதத்தினரும் கேட்க ஆரம்பித்தால் , எப்படி படம் எடுப்பது.....

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவனை வில்லனாக காட்டுவது தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட மதம்தான் வன்முறைக்கு காரணம் என காட்டுவது தவறு.

இஸ்லாமியர்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதே தீவிரவாதம்தானே..
கட்சிக்கொடி கட்டிய காரில் வந்து பல தவறுகள் செய்கிறார்கள். அந்த கட்சிக்கொடியுடன் படம் எடுக்க முடியுமா? சில ஜாதிக்கட்சியினர் வன் முறையில் ஈடுபடுகிறார்கள். அந்த கட்சி தலைவர்களின் படத்துடன் வன்முறையாளர்கள் நடமாடுவது போல எடுக்க முடியுமா? அதை எல்லாம் யாரும் காட்டுவதில்லை. ஆனால் நடப்பதைத்தானே காட்டுகிறேன் என நேரடியாக இஸ்லாமிய அடையாளத்துடன் எதிர்மறை காட்சிகளை காட்டுவதால்தான் அவர்கள் எதிர்க்க வேண்டி இருக்கிறது. இதே போன்ற நிலை , ஓர் அரசியல் கட்சிக்கோ , ஜாதி அமைப்புகளோ ஏற்பட்டு இருந்தால் , அவர்கள் எதிர்ப்பு இதை விட பல மடங்கு அதிகமாக இருந்து இருக்கும்.

ஒரு சினிமா வெளி வரும் முன்பே சிறப்பு காட்சி கேட்டு , இப்படி ரகளை செய்வது சரியா?

இப்படிப்பட்ட சிறப்பு காட்சிகளுக்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. மணி ரத்தினம் எடுத்த பம்பாய் படம் பால் தாக்கரேவுக்கு காட்டப்பட்ட பின் தான் அங்கு ரிலீஸ் ஆனது , பாபா படம் சர்ச்சையில் சிக்கியபோது , தன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்றும் , வேண்டுமானாலும் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து , தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்வதாகவும் ரஜினி சொன்னார். இப்படி ஆயிரம் முன் உதாரணங்கள் உள்ளன. எனவே இஸ்லாமியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை. 

No comments:

Post a Comment