Tuesday, January 1, 2013

இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் குஜராத் தான் இந்த பாலம் இருக்கும் மாநிலம்


                அன்றைக்கே மார்கண்டே கட்ஜு சொன்னார்
                
                                                         http://speedraheem.blogspot.in/2013/01/blog-post_5673.html



அன்றைக்கே அவர் சொன்னார்............!! ( http://speedraheem.blogspot.in/2013/01/blog-post_5673.html )

நீங்கள் பார்க்கும் உலக புகழ் பெற்ற இந்த பாலம் இருக்கும் மாநிலம் எதுவென்று தெரியுமா ?

இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் குஜராத் என்று படம் காட்டினீர்களே, அப்பாவி மக்களும் நம்பினார்களே, இந்த லட்சணத்தில் மோடியை பிரதமராக ஆக்கினால் இந்தியாவே ஒளிரும் என்றும் ஓசி விளம்பரம் செய்தீர்களே....

இது தான் அந்த லட்சணமா ? நல்லா ஒளிருது.

அன்றைக்கே மார்கண்டே கட்ஜு சொன்னார்....

மோடி ஓர் மாயத்தோற்றம், இல்லாததை இருப்பதாக தன்னை காட்டிக் கொண்டார், உலகில் உணவு பஞ்சம் மிகைத்த சோமாலியாவிலே 33 சதவீத மக்கள் தான் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் குஜராத் மாநிலத்தில் 48 சதவீத மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என புள்ளி விவரமாக கூறினார், மேலும் இந்தியாவிலேயே குஜராத்தை மோடி சிறப்பாக வைத்திருப்பதாக ஓர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்றும் கூறினார்,

ஆனால் அன்று யாரும் அதை செவி மடுக்கவில்லை, இன்று தான் புரிகிறது.

கீழே ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது, மேலே மக்கள் சர்க்கஸ் செய்கிறார்கள் இது தான் குஜராத் மாநிலத்தின் முன்னேற்றம் (?)


நன்றி சங்கை ரிதுவான் (பக்கம்)

No comments:

Post a Comment