Monday, January 28, 2013

தமிழக மக்களே ! சிந்தித்து பாருங்கள் !



தமிழர்களுக்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர திட்டம் இந்துக்களின் நம்பிக்கையை உணர்வுகளை புண்படுத்துகிறது என்று சொன்ன பொழுது அதை ஏற்றுக்கொண்டு வாயை திறக்காதவன் எல்லாம் ஒரு சமூகத்திற்கு ஒரு படத்தால் அதே இன்னல்கள் வருகிறது என்று சொல்லும் பொழுது உனக்கு ஏன் உணர்வும் உணர்ச்சியும் வருகிறது என்று கேள்வி கேட்கிறான்?

குஷ்பு சாமி படம் போட்ட சேலையை கட்டினால் என் மத உணர்வை புண் படுத்திவிட்டது என்று கத்தியவனெல்லாம் குர் ஆணையே தீவிரவாத நூலாக சித்தரித்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது அது கருத்து சுதந்திரம் என்கிறான்.?

கற்ப்பு என்பது திருமணத்திற்கு பின்தான் அவசியம் என்று கூறிய குஷ்புவை கோர்ட் கோர்ட்டாக படியேரவிட்டவனெல்லாம் இன்று திருமணமே செய்யமால் குடியும் குடித்தனமாகவும் இருக்கும் கமலை கலாச்சார கதாநாயகன் என்று சொல்கிறான் ?

குடிப்பது பெண்களின் உரிமை என்று கூறிய திரிஷாவிற்கு மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படும் என்று சொன்னவனெல்லாம் மதுக்கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும் என்று குரல் கொடுக்கும் எங்களை கலாச்சார தீவிரவாதியாக சித்தரிக்கிறான் ?? (ஆண்கள் மட்டும் குடிக்கலாமோ )

பிப்ரவரி 14 அன்று காதலர்களுக்கு கல்யாணம் செய்து வைப்போம் என்று தாலியோடு அலைபவனெல்லம் உதட்டோடு உதடு வைத்து முத்தக்காட்சி வைக்கும் கமலை ஆதரித்து பேசுகிறான். (நிஜ வாழ்கையில் காதலித்தால் கலாச்சார சீர்கேடாம் திரையில் காதலித்தால் கலாச்சார கதானயகனாம் )

No comments:

Post a Comment