Wednesday, January 2, 2013

இந்து வேதங்களில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர் பற்றி

இந்து வேதங்களில் இஸ்லாம் பற்றியும்,ஏக அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என அவைகள் கூறும் கூற்றுக்கள் பற்றியும்,நபிகள் மாமனிதர் (ஸல்) பற்றியும் உள்ள இந்து வேத சமஸ்கிருத மந்திரங்கள் குறித்து………..!

பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் பூரணமாக:

“ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாதசிஷ்ய சாகா ஸமன்விதநிருபஸ்சேவ மஹாதேவமருஸ்தல நிவாஸினம்” (பவிஷ்ய புராணம் 3,3,5-8)

இதன் பொருள்:

“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்). அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார்.

“மேலும் அதே புராணத்தில் அந்த ஆசாரியாரின் இனம், தோற்றம்,பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் கூறப்பட்டுள்ளது.”

அவர்கள் ‘கத்னா’ (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (அதான்) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்” என்று அது கூறுகிறது (பவிஷ்ய புராணம், 3:25:3)

No comments:

Post a Comment