Friday, January 4, 2013

"தாடி, ஒரு பாலியல் காந்த ஈர்ப்பு விசை

தாடி ஏற்படுத்தும்  உணர்வுகள் 

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார்.இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தார்.ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம் "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணர்கின்றீர்கள்" என்று நேர்காணல்எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள ஆண்களின் முகம், முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.இறுதியாக இந்த ஆய்வு "தாடி, ஒரு பாலியல் காந்த விசையாகவும், ஆண்களைஅதிகம் கவர்ச்சியாகவும், பெண்களுக்கு ஓர் ஈர்க்கின்ற விதமாகவும் இருப்பதாகத் தீர்மானிக்கிறது. (they concluded from their studies that beard increases “sexual magnetism” and attractiveness andmakes men more appealing to women.)(பெண்களின் கூந்தல் பாலியல் உறவுக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல் இருந்தபோதும் எப்படி ஆண்களை ஈர்ப்பதாக உள்ளதோ அது போல் தாடி பெண்களை ஈர்க்கிறது என்பது இதன் கருத்தாகும்.)கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ராபர்ட் ஜே.பெல்லிக்ரிணி என்பவர் 1973ஆம் ஆண்டு உளவியல் பத்திரிகையில் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். இந்த ஆய்வுக்காக அவர், 22 வயது முதல் 25 வயது வரையிலான தங்கள் தாடியை முழுவதுமாக சவரம் செய்ய விருப்பமுள்ள எட்டுப் பேரை தேர்ந்தெடுத்தார். அவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர்.1. முழு தாடியுடன்2. குறுந்தாடியுடன்3. மீசையுடன்4. முழுவதும் சவரம் செய்யப்பட்ட முகத்துடன்.இந்தப் புகைப்படங்கள் எடுத்து முடித்த உடன், மொத்தம் 32 போட்டோக்களில் ஒவ்வொரு படமும் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்களிடம் கொடுக்கப்பட்டன. இப்படி 64 ஆண்களிடமும் 64 பெண்களிடமும் கொடுக்கப்பட்டன. அந்த ஆண்களிடமும்,பெண்களிடமும், அந்த போட்டோவில் உள்ளவர்களின் ஆளுமைப்பண்பு கூறுகள் (Personality trait) அடிப்படையில் முதன் முதலில் போட்டோவைப் பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்வு, அபிப்பிராயத்தை, (first impression) மதிப்பிடுமாறு கூறப்பட்டது.அந்த ஆய்வின் முடிவு இப்படித் தீர்மானிக்கிறது. "அந்த ஆண்களின் ஆண்மைத் தன்மை, நல்ல தோற்றம், ஆதிக்க உணர்வு, முதிர்ந்த தன்மை, தைரிய தோற்றம், தாராளவாத இயல்பு, ஆரோக்கியத் தன்மை, கவர்ச்சித் தோற்றம் ஆகிய பண்புகளும் அவர்களின் முகத்தில் உள்ள முடிகளின் எண்ணிக்கையுடன் நேரடி தொடர்பு உள்ளதாக நிரூபித்துள்ளது"(The result of this studied by Pelligrini indicated a generally positive correlation between the amount of hair on the person’s face and is being perceived as masculine, good looking, dominant, mature, courageous, liberal, non-confirming, older healthy and attractive.)அமெரிக்க மருத்துவர் டாக்டர்.சார்லஸ் ஹோமேஸ் (Charles Holmes) என்பவர் இப்படிக் கூறுகிறார்:"மக்கள் தாடி வளர்க்க ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியவில்லை? தலையில் முடி வளர்க்கும்போது, அதே முடியை முகத்தில் வளர்ப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று தெரியவில்லை?” என்கிறார்.தலையின் முடி கொட்டிவிட்டால், மிககஷ்டப்பட்டு வெட்கப்படும் அதே மக்கள், சந்தோசமாக தாடியை ஏன் சவரம் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.நீண்ட தாடி ஒரு மனிதனின் தடுமல், சளி கழுத்தை நெருங்குவதை விட்டும் தடுக்கிறது.தாடி மார்க்க கட்டளை மட்டுமின்றி,மனிதனுக்கு பயன் அளிக்கக்கூடியதும் ஆகும். முந்தைய அறிவு ஜீவிகள், மருத்துவர்கள் எல்லோரும் தாடி வளர்ப்பவர்களாக இருந்தார்கள். உதாரணம், லூயிஸ் பாஸ்டர், ஆபிரகாம் லின்கன் உட்பட பலர்.மேற்சொன்ன முன் நிகழ்வுகள், ஆய்வுகள், அறிக்கைகள் எதுவும் முஸ்லிம்களால் சொல்லப்பட்டதோ அல்லது செய்யப்பட்டதோ அல்ல.ஒரு முஸ்லிம் இளைஞன் தாடியுடன் ஒரு கிறித்தவ நிறுவனத்திற்கு ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அவன் தாடியை மழித்தால் வேலை தருவதாக அந்த நிறுவனம் கூறியது. அவன் அதை மறுத்துவிட்டு வெளியில் வந்து, அங்கு இருந்த இயேசுவுடைய போட்டோவை எடுத்துச் சென்று "நீங்கள் இயேசு எனக்கருதக்கூடிய இவர் நேர்காணலுக்கு வந்து இருந்தால், அவரிடம் இதே நிபந்தைனையைச் சொல்வீர்களா?" என்று கேட்டு, அவர்களை வாயடைக்கச் செய்தான். ஒவ்வொரு முஸ்லிமின் மனப்பாங்கும் இப்படித்தான் இருக்க வேண்டும்.மூட நம்பிக்கையும், மருத்துவ உண்மையும்:"தாடியில் வளரும் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் சுகாதாரத்தைக் கெடுக்கும்" என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது மூட நம்பிக்கை.

No comments:

Post a Comment