Tuesday, January 1, 2013

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் திணமணியின் தலையங்கம்

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் திணமணியின்  

தலையங்கம்.


     இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் திணமணியின் தலையங்கம்.

குறிப்பு ் திணமணி கட்டுரையாசிரியர் இஸ்லாமியக் கருத்துக்கள் என்று வெளிப்படையாகக் குறிப்பிடாமல் “வல்லுறவுக்கு மரணதண்டனை விதிக்கும் நாடுகளில் உள்ள நிலைமைகள்“ என்று குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் தடுக்கும் ஆபாச போஸ்டர்கள், வெறியூட்டும் ஆபாச நிகழ்வுகள், ஆடை முறையில் ஒழுக்கமின்மை போன்றவையே பாலியல் வல்லுறவுகளுக்கு காரணம் . இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்காமல் சட்டங்களினால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்பதே கட்டுரையின் மையக் கருத்து.

இஸ்லாமியச் சட்டங்கள் என்று வெளிப்படையாகச் சொல்வதற்கு திணமணி ஆசிரியரின் காவிச் சிந்தனை தடுத்தாலும் வேறு வாரத்தைகளில் அவர் இஸ்லாம்தான் சரியான வழிமுறை என்பதையே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
மதுரை ஆதீனம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டதை பார்த்து பாடம் படித்து மிகவும் லாவகமாக சொல்ல நினைத்துள்ளார் போலும்.

இனி திணமணி ஆசிரியரின் கருத்துக்களைக் காண்போம்

அது போலத்தான் இதுவும்

இறந்துபோன மருத்துவ மாணவி, தனிநபர் என்ற அடையாளத்திலிருந்து, பாலியல் வன்கொடுமைகளுக்கு இலக்காகும் இந்தியப் பெண்களின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

இந்த மாணவியின் சம்பவத்தில் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு புதிய, ஆரோக்கியமான நடைமுறை - அவரை "23 வயது மாணவி' என்று மட்டுமே குறிப்பிட்டதுதான். அவரது பெயர்கூட தெரிவிக்கப்படவில்லை. அவரது புகைப்படம் வெளியாகவில்லை. அவரது தாய், தந்தையர் படம், பேட்டி எதுவுமே வெளியிடப்படவில்லை. வாக்குமூலம் பத்திரிகைகளுக்குக் கசியவில்லை. அவரது அந்தரங்கம் காக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆரோக்கியமான சூழலை அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்கவில்லை. அவர் இறந்த மறுநாளே அவர் பெயர், உத்தரப்பிரதேசத்தில் அவரது ஊர், உறவினர்களின் பேட்டி என்றெல்லாம் அந்தரங்கத் தகவலைக் கசிய வைத்தன சில பத்திரிகைகள். இருப்பினும் பொதுவாக ஊடகங்களும் பத்திரிகைகளும் பாராட்டக்கூடிய வகையில் செய்திகளைக் கட்டுக்கோப்பாக வெளியிட்டன.

இந்த ஆரோக்கியமான சூழல், இதே காலகட்டத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளான மற்ற பெண்களிடம் காட்டப்படவில்லையே ஏன்?

தில்லியில் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோதே, ஒரு 45 வயதுப் பெண்மணி அதே தில்லி நகரில் 3 பேரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார். அவரது பெயரோடுதான் செய்திகள் வந்தன.

தமிழகத்தில் விருத்தாசலம் மணிமுத்தாறு பகுதியில் உறவினருடன் சென்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவர் பெயருடன்தான் செய்திகள் வெளியாகின. தூத்துக்குடியில் 13 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டார். இந்தச் சிறுமியின் புகைப்படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியானது. சேலத்தில் வீட்டு வேலைக்காக விற்கப்பட்ட பெண் மீதான வன்முறையிலும் விவரங்கள் வெளியாகின.

கர்நாடகத்தில், வேலைவாங்கித் தருவதாக ஒரு கும்பல் ஒரு பெண்ணை ஓட்டலில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திலும் பெயர்கள், ஊர் எல்லாமும் வெளியானது. ஏனிந்த பாரபட்சம்?

பாதிக்கப்படும் பெண்கள் குறித்த புகைப்படம், முகவரி, தாய், தந்தையர் விவரங்களை ஊடகங்களும் பத்திரிகைகளும் வெளியிடாது என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் சமூக எள்ளல்களுக்கும் புறக்கணிப்புக்கும் குடும்ப கெüரவத்துக்கும் அச்சப்பட்டு தயங்கி நிற்காமல் புகார் கொடுக்க முன்வருவார்கள். வெளியில் மட்டுமன்றி வீட்டுக்குள்ளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் குற்றங்களும் குறையும். இந்த மண்ணில் உடன்கட்டை ஏறப் பெண்கள் உடன்பட்டதற்கு மிக முக்கிய காரணம், வீட்டுக்குள் இருந்த ஆண்களால் நேர்ந்த பாலியல் கொடுமைகள்தான்.

ஜேப்படி திருடர்களைப் பட்டியலிடுவதைப்போல, பாலியல் குற்றவாளிகள் பட்டியலை வெளியிடுவோம் என்கிறது மத்திய அரசு. பார்த்தவுடன் தெரிந்துகொள்ளும் விதமான தண்டனை முறை பண்டைய இந்தியாவில் இருந்தது. அதாவது, பாலியல் குற்றச்சாட்டுகள் சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்படுமேயானால், மூக்கறுப்பு தண்டனை வழங்கப்பட்டது. இத்தண்டனை பெற்ற ஆண்கள், நெற்றிச் சதையை உரித்து, அறுபட்ட மூக்கின் மேல் மடித்துவைத்து, சதைப்பதியம் இணைந்தபிறகு சில நாள்களில் நெற்றிச் சதையைத் துண்டித்த சிகிச்சை முறையை "உலகின் முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை' என்று வியக்கும் இந்தியா, தன்னை "ஏற்கும்படி' தொல்லை செய்த சூர்ப்பனகை மூக்கறுக்கப்பட்டதை மட்டுமே பரவலாக்கியது. ஆண்கள் மூக்கறுபட்டது மறைக்கப்பட்டுவிட்டது.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதாலும், ஆண்மையற்றவர்களாக்குவதாலும் மட்டுமே பெண்களைக் காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கை வலுவாக இருக்கிறது. இத்தகைய கடும் தண்டனைகள் புதிதல்ல. சில நாடுகளில் வல்லுறவுக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் நாடுகளில் நடிகைகளின் குறைஉடைப் படங்கள் பத்திரிகைகளில் வெளியாகாது. தொலைக்காட்சிகளில் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள நிலைமை என்ன?

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காகப் பொங்கியெழுந்த அதே புதுதில்லியில், ""புத்தாண்டு 2013'' நள்ளிரவு நடனத்துக்காக "போர்னோ' நடிகை சன்னி லியோன், ஒரு கோடி ரூபாய் சம்பளத்துடன் கவர்ச்சி நடனமாடவிருக்கிறார். புதுதில்லியின் அனைத்து ஓட்டல்களிலும் புத்தாண்டு நள்ளிரவு விருந்துக்கான அனுமதி டிக்கெட்டுக்கு நீ, நான் என்று போட்டி.

பெருநகரங்கள் மட்டுமன்றி சாதாரண நகரங்களிலும்கூட அனைத்து ஓட்டல்களிலும் கள்ளும் கவர்ச்சியும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. "வெறியூட்டு' எல்லா நகரங்களிலும் நடைபெறும். ஊடகச் சிறப்பு நிகழ்ச்சிகளும் இதில் விதிவிலக்கல்ல. புத்தாண்டு தினத்தன்று மட்டும் எத்தனை கற்பழிப்புகள் நடக்கப் போகிறதோ, யார் கண்டது? எல்லா தவறுகளும் வெளிச்சத்துக்கு வருவதோ, தண்டனை பெறுவதோ இல்லை என்பதுதானே இந்தியாவின் இன்றைய நிலைமை.

"வெறியூட்டை' அனுமதித்துக்கொண்டே சமூகத்தை நெறிப்படுத்த முடியுமா என்பதுதான் நமது கேள்வி. மதுபானக் கடைகளை தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை அனுமதித்துவிட்டு, தொலைக்காட்சிச் சேனல்களில் "மிட்-நைட்' மசாலாக்களை ஒளிபரப்பிக் கொண்டு, சட்டம் போடுவதால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்துவிட முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்களே, அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

லஞ்சம் வாங்கிக்கொண்டே நேர்மையை வலியுறுத்துகிறார்கள் அரசியல்வாதிகள்! லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொண்டே, லஞ்சமற்ற சமூகம் வேண்டும் என்று கொதிக்கிறார்கள் மக்கள்! அதுபோலத்தான் இதுவும்!

-நன்றி சகோதரர் அப்துன் நாசர்



No comments:

Post a Comment