Thursday, January 24, 2013

வானவியலில் இஸ்லாம் பிக்பாங் தியரி big bang thyari

வானத்தை வலிமை மிக்கதாக படைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம். (குர்ஆன் 51:47).





1400 வருடங்களுக்கு முன்னர் வானியல் என்றால் என்னவென்றே தெரியாத அக்காலப்பகுதியில் பிரபஞ்சம் விரிவடைந்து செல்வதை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஸமாஉ' என்ற சொல்லானது குர்ஆனின் பல இடங்களில் வெளி,பிரபஞ்சம் என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இவ்வசனத்திலும் அக்கருத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது பிரபஞ்சம் விரிவடைந்து செல்கிறது எனும் கருத்தை தருகிறது. இது இன்றைய நவீன விஞ்ஞானம் கூறுகின்ற தீர்க்கமான முடிவாகும்.

'இன்னா ல மூசிஊனா' என்ற அரபு மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு 'அதை நாமே உறுதியாக விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம்' என்பதாகும். இது 'அவ்சா' - 'விரிவடைதல்' என்ற வினைசொல்லிருந்து வந்ததாகும். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 'லா' என்ற முற்சேர்க்கை பெருமளவு என்ற கருத்தை தருகிறது. இதனடிப்படையில் ';நாம் இந்த பிரபஞ்சத்தை பெருமளவு விரிவாக்கியுள்ளோம்'; என்பது இதன் கருத்தாகும்.

இந்த முடிவைதான் விஞ்ஞானம் இன்று அடைந்துள்ளது.

'பிரபஞ்சமானது ஒரு மாறா இயல்புடையதும் அறியமுடியாத ஆரம்பத்தைக் கொண்டதுவும் ஆகும்' என்பதே 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அன்றைய விஞ்ஞானம் ஏற்றுக்கொண்ட ஒரே கருத்தாக இருந்தது. எனினும், நவீன

Georges Lemaitre
தொழிநுட்பங்களின் உதவியை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினதும் அவதானங்களினதும் முடிவானது, 'பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் இருந்தது, மேலும் அது தொடர்சியாக விரிவடைந்து செல்கிறது' என்பதாகும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்ய பௌதீகவியளாளர் அலெக்ஸான்டர் பிரீட்மேன் (Alexander Friedmann) என்பவரும் பெல்ஜிய பிரபஞ்சவியலாளரான ஜோர்ஜஸ் லேமாட்ரே ( Georges Lemaître) என்பவரும் 'பிரபஞ்சம் தொடர்ச்சியான இயக்கத்தை கொண்டுள்ளதுடன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது' என்ற கருத்தை கோட்பாடடாக முன்வைத்தனர்.

இவ்வுண்மையானது 1929ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு அவதானிப்புத் தரவுகள் ( Observation) மூலம் உறுதிசெய்யப்பட்டது. அமேரிக்க வானியலாளரான எட்வின் ஹப்ள் தொலைநோக்கியினூடாக வானை அவதானித்த போது நட்சத்திரங்களும், பால்வெளி மண்டலங்களும் (galaxies) தொடர்ச்சியாக ஒன்றினிலிருந்து மற்றயது விலகி செல்வதை கண்டுபிடித்தார் இக் கண்டுபிடிப்பு வானியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனை என்று கருதப்படுகிறது.

Edwin Hubble with his giant telescope
இவ்வாறு ஹப்பிள் அவதானித்து கொண்டிருந்த போது நட்சத்திரங்களிலிருந்து சிகப்பு நிற ஒளி வருவதை கண்டார். இதற்கு காரணம் வான் பொருளிலிருந்து பார்வை புள்ளியை நோக்கி வரும் ஒளி ஊதா (violet) நிறமாக இருந்தால் அப்பொருள் அப்புள்ளியை நோக்கி வருகிறது என்றும், பார்வை புள்ளியை நோக்கி வரும் ஒளி சிகப்பு (RED) நிறமாக இருந்தால் அப்பொருள் பார்வை புள்ளியை விட்டும் விலகி செல்கிறது என்பது பௌதீகவியலின் பொதுவான விதியாகும். ஹப்பிள் அவரது அவதானிப்பின் போது நட்சத்திரங்களிலிருந்து சிகப்பு நிறம் வருவதை கண்டறிந்தார்.







 

நட்சத்திரங்களும் பால்வெளிமண்டலங்களும் எம்மை விட்டு மட்டும் விலகி செல்லவில்லை. மாறாக அவை ஒன்று மற்றயதிலிருந்தும் விலகி செல்கிறது. சுருங்க சொல்வதாயின், நட்சத்திரங்கள் மென்மேலும் விலகி செல்கின்றன.

பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் ஏனைய பொருளிலிருந்து விலகி செல்கிறது என்பதன் கருத்து பிரபஞ்சம் விரிவடைந்து செல்கிறது என்பதாகும். தொடர்ந்து வந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகள் (observations) பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைகிறது என்ற கருத்தை உறுதிப்படுத்தியது.

ஒரு சிறு உதாரணத்தை கொண்டு இதை நன்கு விளங்கி கொள்ளலாம். நாம் இந்த பிரபஞ்சத்தை காற்று ஊதப்படும் ஒரு பலூனோடு ஒப்பிடலாம். பலூன் மேலும் ஊதப்பட்டால் அதன் மேற்பரப்பிலுள்ள புள்ளிகள் ஒன்றிலிருந்து மற்றயது விலகி செல்லும். அதை போன்று பிரபஞ்சம் விரிவடையும் போது வானிலுள்ள பொருட்களும் ஒன்றிலிருந்து மற்றயது விலகி செல்கிறது. 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் அல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) இந்நிகழ்வை கோட்பாட்டு ரீதியல் கண்டுபிடித்தார். இருப்பினும் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'நிரந்தர பிரபஞ்ச திட்டத்' தோடு மோத விரும்பாததன் காரணமாக தனது கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. பிற்காலத்தில் இந்நிகழ்வை 'தனது வாழ்வின் பெரும் பிழை' என கூறி வருதப்பட்டார்.



தொலைநோக்கி என்றால் என்ன என் அறிந்திறாத காலத்தில்தான் குர்ஆன் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தியது. ஏனெனில் குர்ஆன் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் படைத்து ஆளுகின்ற இறைவனின் திருவசனமாகும்.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:13)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28).








No comments:

Post a Comment