Sunday, January 27, 2013

காந்தி கொலை பற்றி பேரன் துஷார் காந்தி தரும் திடுக்கிடும் தகவல்கள்!!

காந்தியார் கொலையில் பார்ப்பனர் பின்னணி!காந்தியாரின் பேரன் துஷார் காந்தி தரும் திடுக்கிடும் தகவல்கள்!!


புதுடில்லி, சன. 31 காந்தியார் படுகொலையின் பின்னணியில் பார்ப்பனர்கள் இருந்ததாக காந்தியாரின் பெயரன் துஷார் காந்தி, தனது புத்தக அறிமுக விழாவில், திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.காந்தியார் கொல்லப்பட்ட நினைவு நாளான நேற்று (30.1.2007) டில்லியில் துஷார் காந்தி எழுதிய ``காந்தியைக் கொல்லுவோம்’’ என்ற புத்தக அறிமுக விழா நடைபெற்றது. அதில் காந்தியின் பெயரன் துஷார் காந்தி பேசியதாவது:தேசப் பிரிவினைக்குக் காரணமாக இருந்ததால்தான் காந்தியைக் கொன்றதாகவும், பாகி°தானுக்கு ரூ.55 கோடியை இந்தியா தர வேண்டும் என்று காந்தி வற்புறுத்தியதால்தான் காந்தியைக் கொன்றதாகவும் சங் பரிவார் அமைப்புகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தத் தத்துவம் கொலையை மறைப்பதற்காகக் கூறப்படும் சாக்குப் போக்குகள். அது உண்மையில்லை. பார்ப்பனர்கள் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற விரும்பினர். அதன் பின்னணியில் தான் தேசத்தின் தந்தையை பலமுறை கொல்ல முயன்றனர். இறுதியில் படுகொலை செய்தனர்.

பார்ப்பனர்களின் திட்டம்!

காந்தியார் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். பார்ப்பனர்கள் ஆதிக்கச் சக்திகளாக விளங்கவேண்டும் என்பதற்காகவே இந்தியாவை அவர்கள் இந்து தேசமாக மாற்ற விரும்பினர். அதனால்தான் காந்தியார் குறி வைக்கப்பட்டார்.

1948 ஆம் ஆண்டு மகாராட்டிரா மாநிலம் சனவரி 30 ஆம் நாள் காந்தியார் கொலை செய்யப்படுவதற்கு முன்பே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சிகளுக்கு பூனே மையமாகத் திகழ்ந்தது.

1935 ஆம் ஆண்டு பூனேயில் தாழ்த்தப்பட்டோர் பேரணி ஒன்றில் காந்தியார் கலந்துகொண்டபோது, அவரை நோக்கிக் குண்டுகளை வீசிக் கொல்ல முயன்றனர். அதில் காந்தியார் தப்பினார்.காந்தியாரைக் கொல்ல மூன்று முறை முயற்சிகள்மகாராஷ்டிராவில் வர்தா, பஞ்ச்கனி ஆகிய இடங்களில் காந்தியாரைக் கொல்ல முயற்சிகள் நடைபெற்றன. மேற்கண்ட மூன்று கொலை முயற்சிகளிலும் நாதுராம் கோட்சே, நாராயண் அப்தே ஆகியோர் தலைமையிலான தீவிரவாதக் குழுவினர் ஈடுபட்டனர்.காந்தியார் கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 1968 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ``கபூர் ஆணையம்’’ காந்தியார் கொலையின் பின்னணியில் உள்ள சதி தொடர்பான ஏராளமான விவரங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.

பாதுகாப்பில் குளறுபடிகள்!

காந்தியாரின் பாதுகாப்பில் ஏராளமான குளறுபடிகள் இருந்தன. காந்தியாரின் சகாப்தத்தையும், அவரது தத்துவத்தையும் ஒழித்துக் கட்டுவதற்காகவே காந்தியார் மீதான கொலை முயற்சிகள் நடைபெற்றன. நம் நாட்டில் தற்போதும் இந்து + மு°லிம்கள் இடையே வெறுப்புணர்வு நீடித்து வருகிறது. அதைப் போக்கி இரண்டு மத மக்கள் இடையேயும் மனித நேய உறவுகளை மேம்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இந்து மக்களும், மு°லிம் மக்களும் பிளவுபட்டுள்ளனர். ஒன்றுபடுத்தத் தேவையான முயற்சிகளை எடுக்காவிட்டால், நாடு மற்றொரு பிரிவினையைச் சந்திக்க நேரிடும்.இவ்வாறு துஷார் காந்தி பேசினார்.

துஷார் காந்தி!

காந்தியாரின் பெயரரான துஷார் காந்தி 1944 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிகழ்வுகளை ஆய்வு செய்து, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இதற்காக காந்தியாரின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை, அரசியல் மோதல்கள் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு செய்திகளை ஆய்வு செய்து இப்புத்தகத்தைத் தொகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment