புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த
கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?
கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.
இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.
Monday, March 4, 2013
பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார் வாழ்கை வரலாறு (சுருக்கமாக)
பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்...........!!
உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
சிறு வயது வாழ்க்கை :
16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைப்பற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.
இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும் பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
உமர் முஃக்தார் தொழில் ரீதியாக திருக்குர்ஆனை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர் தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார்.
பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப்படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ஏன் இன்னும் லிபியா விழவில்லை
படைத்தளபதி பயந்து கொண்டே சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது
முசோலினி : யார் அவர்களை வழி நடத்துவது ?
தளபதி : ஒமர் முக்தார்
முசொலினி : ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?
தளபதி : சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher முசோலினி ஆச்சரியத்துடன் a teacher ?!! பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே Even I was a teacher என்கிறான்.
பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய ஓமர்-அல்-முக்தார் பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா ?
இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்கையும், அந்நியரிடம் அடிமைப் படக்கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.
ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படி வற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில் 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி சர்வதேச விதி முறைகளையும் மீறி அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.
சிறையில் சிறை அதிகாரி ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை ? என்ற போது ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும் என்றாராம் ஒமர் முக்தார்.

ஹசாரேக்கு ஆதரவு ஏன் இந்த பாரபட்சம் மது விலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 33 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம்
மது விலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 33 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த காந்தியவாதி சசி பெருமாளை போலீஸார் வலுக்கட்டாயமாக உண்ணாவிரத இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இவர் கடந்த 33 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார், இவருடைய போராட்டத்திற்கு எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுத்தது போல் தெரியவில்லை,
அதேவேளையில் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட போது ஒட்டுமொத்த ஊடகமும் அன்னா ஹசாரேயை ஃபோகஸ் செய்து நேரடி ஒளிபரப்பு வெளியிட்டு அவர் தான் இந்தியாவிற்கே வழிகாட்டி என்ற அடிப்படையில் சித்தரித்தது,
ஆனால் அதே அகிம்சை வழியில் போராடி கொண்டிருக்கும் சசி பெருமாளை எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுத்த செய்தி வெளியிடவில்லை,
அதேபோல் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக ரஜினி, விஜய் உள்ளிட்ட அரிதாரம் பூசிய கூட்டம் ஆதரவு தெரிவித்திருந்தது,
இன்னும் சொல்ல போனால் சென்னையிலிருந்து டெல்லி சென்று அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்த விஜய், அதே சென்னையில் நடைபெறும் சசிபெருமாளின் போராட்டத்திற்கு எட்டி கூடபார்க்கவில்லை, ரஜினியோ ஆதரவு அறிக்கை கூட வெளியிடவில்லை,
ஒன்று மட்டும் நன்றாக விளங்குகிறது, நாட்டு மக்கள் மத்தியில் முழுமையான அக்கறை இல்லாதவர்கள் தான் ஊடகத்துறையிலும், சினிமாதுறையிலும் மிகைத்து காணப்படுகிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
RSS துவக்கமும் பின்னணியும்
.ஹெட்கேவர் தலைமை (துவக்கமும் பின்னணியும்)
ஹெட்கேவர் தலைமை (துவக்கமும் பின்னணியும்)
1925-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி! அது ஒரு விஜயதசமி நாள்! அன்றுதான் ‘ராஷ்டிரிய சுயம் சேவக்சங்’ என்ற நஞ்சு பிறப்பெடுத்தது! ‘Hinduism is our Natinalism’ ‘இந்துயிசமே எங்கள் தேசியம்’ என்ற பிரகடனத்தோடு உருவானது அந்த அமைப்பு!
வகுப்புவாதப் பிரச்சனைக்கு காந்தியார் காட்டிய ‘சமரப் பாதை’யை பின்பற்றுவதுதான் சரியான வழி என்ற எண்ண ஓட்டம் அன்றைய சூழ்நிலையில் மக்களிடையே நிலவியது! இந்து – முஸ்லீம்களிடையே குறைந்தபட்ச ஒற்றுமையை உருவாக்கி அகிம்சைமுறை ஒத்துழையாமை இயக்கங்கள் மூலம் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் காந்திய முறைக்கு மக்களிடையே செல்வாக்குப் பெருகியது. ஆனால், இந்துக்களே போராடி இந்த நாட்டை இந்துக்களின் நாடாக்க வேண்டும் என்று துடித்த பார்ப்பனர்கள்; காந்தியாரின் இந்த வழி, தங்கள் நோக்கத்தையே சிதைத்துவிடும் என அஞ்சினார்கள். வெள்ளைக்காரர்கள் எதிர்ப்பு என்பதைவிட, முஸ்லீம்கள் எதிர்ப்பு என்பதிலேதான் அவர்களுக்கு ஆர்வமும் கவனமும் இருந்தது.
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை – அதன் முதல் தலைவரான ‘ஹெட்கேவர்’ இவ்வாறு கூறுகிறார்;
“காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவால் நாட்டில் எழுச்சி குறைந்து வருகிறது. அதன் காரணமாக தீய சக்திகள் கொடூரமாக தலைவிரித்தாடுகின்றன. தேசிய போராட்டம் உச்ச கட்டத்திற்கு வரவேண்டிய நேரத்தில், ஒருவருக்கொருவர் பொறாமை வளர்ச்சிகள் வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. எல்லா துறைகளிலும் தனிப்பட்ட தகராறுகளே இருக்கின்றன. பல்வேறு சங்கங்களிடையே மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. பார்ப்பனர் – பார்ப்பனல்லாதவர் போராட்டம் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது. ‘யாவான் விஷநாகங்கள்’ (முஸ்லீம்களை இப்படிக் குறிப்பிடுகிறார்.) ஒத்துழையாமை இயக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, நாடெங்கும் கலவரங்களைத் துவக்கி விஷத்தைக் கக்கி படமெடுத்தாடி வருகின்றன.” (ஆதாரம்: சி.பி. பிஷிகார் எழுதிய ‘கஷேவ் சன்ங் நிர்மதா’ இந்தி நூல்.)
ஹெட்கேவரின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் காந்தியாரை எதிர்க்கவும், முஸ்லீம்களை எதிர்க்கவும், பார்ப்பனர்களை பாதுகாக்கவுமே ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது என்ற உண்மையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. (1925-ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து வகுப்புவாரி உரிமைக் கேட்டு தந்தை பெரியார் போர்க் கொடி உயர்த்துகிறார். அதே 1925-ம் ஆண்டில் நாட்டில் பார்ப்பனர் – -பார்ப்பனல்லாதவர் போராட்டம் நடப்பதாக ஹெட்கேவர் கூறுவதையும் வாசகர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.)
அது மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ். அதிகார பூர்வமாகவே, முஸ்லீம்களுக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்துகிறது. “நாட்டில் முஸ்லீம்கள் கலவரம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு கலவரத்தையும் முஸ்லீம்களே துவக்கி நடத்துகிறார்கள். அவர்களே குற்றவாளிகள்.” என்று கோல்வாக்கர் (இவர் ஹெட்கேவரின் வாரிசாக ஆர்.எஸ்.எஸ். தலைவரானவர்.) ‘The man and his mission’ என்ற நூலில் பக்கம் 24-25-ல் குறிப்பிடுகிறார். கலவரத்தை அவர் இந்து – முஸ்லீம் கலவரம் என்று குறிப்பிடவில்லை. முஸ்லீம்கள் கலவரம் என்றே குறிப்பிடுகிறார்! கோல்வார் பிரகடனம் இத்தோடு நின்றுவிடவில்லை. ஒளிவு மறைவு இல்லாமல் திட்டவட்டமாகவே அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “பாரத தேசம் என்பது இந்துக்களின் தேசம். ராஷ்டிரம் என்பது இந்துக்களின் ராஷ்டிரமே இந்த அரசியல் உண்மையை உணராமல் பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நடிப்புகளின் கற்பனையில் சிக்குவதற்கு டாக்டர் ஹெட்கேவர் தயாராக இல்லை. இதுதான் உண்மை. உண்மையை வெளிப்படையாக சொல்கிறோம். இந்துக்கள் மட்டுமே இந்துஸ்தானை விடுவிக்க முடியும். இந்துக்களின் சக்தி மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்த உண்மையிலிருந்து யாரையும் திசை திருப்பிவிட முடியாது. எனவே இந்து இளைஞர்கள் ஒன்று திரட்டப்படவேண்டும். வேறு வழியில்லை. ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது இதற்குத்தான். அந்தப் புனித நாள் 1925 விஜய தசமி நாள். (குரு கோல்வாக்கர் அதே நூலில் பக்கம் 25)
எனவே, முஸ்லீம்களுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்டு அதையே, நோக்கமாகக் கொண்டு உருவானது- -தான் ஆர்.எஸ்.எஸ். என்பதற்கு அவர்களின் வாக்கு மூலங்களே சான்றுகளாகும். ‘நாங்கள் முஸ்லீம்களுக்கு விரோதிகள் அல்ல’ என்று இவர்கள் நடத்தும் பிரச்சாரம், உண்மைக்கே தொடர்புடையது அல்ல. 25-9-1925-ல் நாக்பூரில் ஹெட்கேவர் இல்லத்தில் 5 முக்கிய புள்ளிகள் கூடி ஆலோசனை செய்து திட்டம் ஒன்றை வகுத்தார்கள். இந்த ’5′ நபர்கள் யார் யார் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு! இந்த 5 நபர்களின் பெயர்களை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெளியிடுவதே இல்லை. ஆர்.எஸ்.எஸ் காரர்களின் வெளியீடுகள் எல்லாவற்றிலும், ‘அய்வர் குழு’ என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர, இதுவரை அந்த ‘அய்வர் யார்?’ என்பதை அவர்கள் வெளியிட்டதே இல்லை!
அந்த அய்வர் யார்?
1. டாக்டர் பி.எஸ். மூஞ்சி.
2. டாக்டர் எல்.வி. பாராஞ்சிபே.
3. டாக்டர் கே.பி. ஹெட்கேவர்.
4. டாக்டர் தோல்கார்.
5. டாக்டர் பாபாராவ் சர்க்கார்.
இதுதான் ஹெட்கேவர் வீட்டில் ஆர்.எஸ்.எஸ். துவக்கிய நாளில் கூடிய அய்வர் குழு. இந்தப் பெயர்கள் ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகள் அனைத்திலும் மறைக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்ன? வேறு ஒன்றுமில்லை; இவர்கள் காந்தியாரைக் கொலை செய்த இந்து மகாசபை என்ற அமைப்பின் தலைவர்கள். அனைவருமே மராட்டிய பார்ப்பனர்கள்.
காந்தியார் கொலைக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று சாதித்துக் கொண்டிருக்கும் கூட்டம் ஆர்.எஸ்.எஸ். அல்லவா? ஆர்.எஸ்.எஸ். மூலகர்த்தாக்கள்தாளே காந்தியாரை கொலை செய்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தான் என்ற உண்மை வெளியாகிவிட்டால், அவர்கள் முகத்திரை கிழிந்துவிடும் அல்லவா? எனவேதான் இந்த இருட்டடிப்பு சூழ்ச்சி!
இன்னொரு காரணமும் உண்டு. ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பை உருவாக்கிய பெருமை ஹெட்கேவருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்; மற்றவர்களுக்கு அந்தப் பெருமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பது மற்றொரு நோக்கம். தலைவரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்பதற்காக, இல்லாத பெருமைகளை ஏற்றிச் சொல்வது இவர்களது வாடிக்கை. ஆனால், இரும்புத் திரைகளைப் போட்டு மறைத்தாலும் உண்மைகள் வெளிவராமல் போய் விடுமா?
காந்தியாரைக் கொலை செய்த ‘கோட்சே’ ஒரு இந்து மகா சபைக்காரர் என்றவுடன், தங்களுக்கும் இந்து மகா சபைக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று அறிவித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர்களே, இந்து மகா சபைத் தலைவர்கள்தான்! ஆர்.எஸ்.எஸ். துவக்க நாளில் ஹெட்கேவர் இல்லத்தில் கூடிய அந்த ’5 பேர்’ யார் என்ற முகவரிகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தன? அந்த அய்வர் குழுவிலே ஒருவரான, எல்.வி. பராஞ்சிபே ஒரு கட்டுரையில் சுழலவிடுகிறார். ஆர்.எஸ்.எஸ். துவக்கிய நாளில் கூடிய அந்த அய்ந்து பேர்கள் பெயர்களையும் அவரே குறிப்பிட்டு ஒரு கட்டுரையைத் தீட்டிவிட்டார். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். மூலவர்களாக விளங்கிய இந்து மகாசபைத் தலைவர்கள் 5 பேர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு விட்டன. (இந்தக் கட்டுரை ‘கேசரி’ என்ற நாளேட்டில் ஜூலை 5, 1940-ல் வெளிவந்திருக்கிறது.)
அது மட்டுமல்ல , இன்னொரு திடுக்கிடும் செய்தி! 1930-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஹெட்கேவர் சிறைச்சாலையில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பதவியான ‘சங்சலாக்’ பதவியை ஏற்று ஆர்.எஸ்.எஸ்சையே வழிநடத்திச் சென்றவர் யார் தெரியுமா? எல்.வி. பராஞ்சிபே என்ற, அய்வர் குழுவில் ஒருவராக இருந்த, அதே இந்து மகாசபைத் தலைவர்தான்! பின்னர் 1945-ம் ஆண்டு ‘காஷிநாத் பாந்த்லிமாயி’ (இவர் அப்போது மராட்டிய மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர்) பாபாராவ் சவர்க்கார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கட்டுரை எழுதினார். இந்த பாபாராவ் சவர்க்கார் என்ற இந்து மகாசபைத் தலைவர்.

Sunday, March 3, 2013
முதுமைத் தோற்றம் ஆரம்பிச்சுடுச்சா? கவலையை விடுங்க…
எப்போதும் இளமையோடு இருக்க
அனைவரும் எப்போதும் இளமையோடு இருக்க முடியாது. ஆனால் முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டதால், அவர்கள் நீண்ட நாட்கள் இளமையோடு வாழ்ந்தனர். தற்போதோ மக்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளை உண்பதால், அவர்கள் 30 வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைகின்றனர். அதிலும் முகத்தில், கழுத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை காணப்படுகின்றன. அவ்வாறு தோற்றமளிக்க ஆரம்பித்தால், கவலைப்படாமல் ஒரு சில உணவுகளை உண்டாலே அந்த தோற்றத்தை தடுக்கலாம். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம்.
ப்ளு பெர்ரிஸ் : இந்த பழம் மிகவும் சிறந்த முகச்சுருக்கத்தை தடுக்கும் பழம். ஏனெனில் இதில் உள்ள ஆன்தோசைனோசைடு, முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் முகச்சுருக்கம், பார்வை குறைவு போன்றவற்றை தடுக்கிறது. மேலும் இதில் 40% ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதல் இருக்கும் வைட்டமின் சி, உடலில் இருக்கம் கொலாஜென் உருவாக்கத்தை உறுதிப்படுத்துவதால், முதுமையை தடுக்கிறது.
தக்காளி : இது மற்றொரு சிறந்த உணவுப் பொருள். இதனை உண்பதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். மேலும் இதன் ஜுஸை முகத்திற்கு தடவி வந்தால், முகமானது பளபளப்புடன் இருக்கும். ஏனென்றால் தக்காளியில் இருக்கும் லைக்கோபீன் என்னும் கெமிக்கல், முகத்தில் தோன்றும் கோடுகளை தடுப்பதோடு, செல்கள் பாதிப்பு மற்றும் சரும தோற்று நோய்கள் வராமலும் தடுக்கும்.மீன் எண்ணெய் : கடலோரப் பகுதிகளில் வாழும் பெண்கள் இளமையோடு காட்சியளிக்க காரம் என்னவென்று தெரியுமா? ஏனேனில் மீன் மற்றும் மீன் எண்ணெயை அவர்கள் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், சருமம் இறுக்கமடைந்து அளமை தோற்றதை அளிக்கிறது. அதிலும் குளிர்ந்த தண்ணீரில் வாழும் சாலமன், டுனா போன்ற மீனில் அதிகமான அளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட் இருப்பதால், சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை கிடைப்பதோடு, சுருக்கங்களும் மறையும்.
கிரீன் டீ : பானங்களில் கிரீன் டீ மிகவும் ஆரோக்கியமானது. கிரீன் டீ குடிப்பதால் செரிமானத் தன்மை சரியாக நடப்பதோடு, உடல் எடையும் குறைந்து, முகச்சுருக்கமும் குறையும். முக்கியமாக முகச்சுருக்கம் வருவதற்கு டி.என்.ஏ பாதிப்பும் ஒரு காரணமாகும். இந்த டி.என்.ஏ பாதிப்பை கிரீன் டீ தடுக்கும். எனவே தினமும் ஒரு கப் கிரீன் டீ குடித்தால், முகம் அழகாக சுருக்கம் இல்லாமல் இருப்பதோடு, கூந்தல் உதிராமல், எடை குறைந்து ஸ்லிம்மாக அழகாகஇருக்கலாம்.
சாக்லேட் : சாக்லேட் ஃப்ளேவர் மிகவும் பிடிக்கும் என்றால் அந்த சாக்லேட் ஃப்ளேவர் சாப்பிடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சாக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ என்னும் பொருள், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாவதோடு, சுருக்கம் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தரும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடுங்க, இளமையோடு இருங்க
மேற்கூறிய உணவுப் பொருட்களையெல்லாம் சாப்பிட்டால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், தினமும் அதிக அளவு தண்ணீர் குடித்தாலும் சருமத்தில் சுருக்கும் ஏற்படுவதை தடுக்கலாம்.
Saturday, March 2, 2013
உஉஷார்!! உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!!
உஷார்! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!!
தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடு;ப்பு நடத்தி வருகிறார்கள் அவர்கள் தயாரித்த கணக்கெடுப்பு பற்றிய பட்டியலை கீழே தந்திருக்கிறோம். இது சமீபத்தில் அதாவது 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த நமது சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள். அப்படிhனால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.
இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம். இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள். நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள். தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.
இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் காய்கறிவியாபாரி ஐஸ்கிரீம் வியாபாரி கியாஸ் வினியோகஸ்தர்கள் தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.
நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா ஷம்சுத்தீன்.

திருமாவளவன் அவர்களின் பார்வையில் நபிகளார்

இஸ்லாம் உலகின் தலைசிறந்த ஜனநாயகத் தத்துவம். ஒவ்வொரு மனிதனும் ஆணவம் இல்லாமல் அகந்தை இல்லாமல் மனிதநேயத்தோடு வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை நெறி.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் தோன்றிய மகத்தான மானுடத்தின் அற்புதம் நபிகள் நாயகம். மனிதன் எப்படி பக்குவப்பட வேண்டும், ஒழுங்கு பட வேண்டும், அமைதியாக வாழ வேண்டும் என்பது பற்றி எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் தோன்றி பரப்புரை செய்து இருக்கிறார்கள். கெளதம புத்தர், இயேசு பெருமான் போன்ற மகான்களின் வரிசையில் நபிகள் நாயகம் மகத்தான ஒரு மனிதர்.
ஆனால் அந்த மகான்களிடமிருந்து இவர் மாறுபடுகிறார் அவர்கள் மக்களுக்கு வாழ்க்கை நெறியை வழங்கினார்கள். வழிகாட்டினார்கள். என்றாலும் அந்தத் தத்துவத்தில் ஒரு ஜனநாயகப்பூர்வமான, காலம் காலமாகத் தொடர்ந்து வலுவாக மக்களை வழிநடத்திச் செல்லக் கூடிய சிறந்த ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறைகளை வழிமுறைகளை, வகுத்தளித்தவர் நமது நபிகள் நாயகம்.
உருவ வழிபாடு, அருவ வழிபாடு என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இறைவழிபாட்டில் நடைமுறையில் இருக்கிற முறைகள். அருப வழிபாடு என்பது பல மதங்களால் பின்பற்றக் கூடியது என்றாலும்கூட இஸ்லாத்தில் அது மிகவும் இறுக்கமாகவும் வலுவாகவும் பின்பற்றப்படுகிறது. உருவம் கூடாது என்று தனிமனிதனின் ஆணவத்தை, அகந்தையை அழிப்பதற்கான உத்தியாகவே நபிகள் நாயகம் கையாண்டிருக்கிறார். இறைவனுக்கு உருவம் கொடுப்பது, தனிமனித துதிக்கு வழிகாட்டுவதாக அமைந்து விடுகிறது. எந்த இறைவனைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு தூதர் வருகிறாரோ அந்தத் தூதருக்கே உருவ வழிபாட்டைச் செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்.
இயேசு பெருமானுக்கு உருவம் கெளதம புத்தருக்கு உருவம். இவர்கள் இறைவனின் தூதர்களாக மக்களால் அறியப்பட்டாலும் இறைவனுக்கு உருவம் உண்டு என்று நம்புகிற காரணத்தால் இந்தத் தூதர்களுக்கும் உருவம் இருக்கும். அதன் மூலம் அதைப் பின்பற்றக் கூடிய அல்லது மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய பரப்பக் கூடிய பின்னால் வருகிற மதகுருமார்கள், மடாதிபதிகள் தங்களை முன்னிறுத்தி தங்களுக்கான உருவத்தை உயர்த்திப் பிடித்து மக்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டு வருகிற நிலையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
மதம் என்பது மூலதனமாக வளர்ச்சி பெற்று அந்த மதத்தை வழிநடத்தக் கூடிய மதகுருமார்கள், மடாதிபதிகள் தாங்களே இறைவனின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரு நிலை பிற்காலத்தில் வளர்ந்து விடுகிறது. இதைக் காலச்சுவடுகளில் நம்மால் காண முடிகிறது.
ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய நபிகள் நாயகம் அவர்க:ள் இறைவனுக்கு உருவம் இல்லை; உருவ வழிபாடு கூடாது என்று மக்களுக்கு வழிகாட்டியதோடு தம்முடைய உருவத்தை எந்தச் சூழ்நிலையிலும் முன்னிறுத்த விரும்பவில்லை. தம்முடைய உருவப் படத்தையோ சிலைகளையோ மக்களுக்கு ஒரு வடிவமாக அடையாளமாக உயர்த்திப் பிடிப்பது தம்மை இறைவனால் அனுப்பப்பட்ட ஆளுமைமிக்க, என்னை வழிபட்டால் அது கடவுளை வழிபட்டது போல் ஆகும் என்கிற வகையில் எப்போதும் மக்களைத் தவறாக வழிநடத்தவில்லை.
சாதாரணமாக ஒவ்வொரு மனிதனும் தன்னை முன்னிறுத்துவது இயற்கை. தன்னுடைய உருவத்தையும் வடிவத்தையும் திரும்பத் திரும்ப மக்களின் கண் முன்னால் நிறுத்தி அவர்களின் நெஞ்சத்தில் ஆழப் பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். தலைவர்களாக இருப்பவர்கள் அது அரசியல் தளமாக இருந்தாலும் மதத் தளமாக இருந்தாலும் அந்தத் தளங்களில் பணியாற்றக் கூடிய ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதை நாம் பார்க்கிறோம். 100க்கு 99 % அப்படித்தான்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் தம்மை எந்தச் சூழலிலும் எந்த வகையிலும் அடையாளப்படுத்துவதற்கு, முன்னிறுத்துவதற்கு அவர் விரும்பவில்லை என்பது அடிப்படை கொள்கையிலிருந்து வழிதவறி விடக் கூடாது, திசை மாறக் கூடாது என்பதுதான். தமக்குப் பின்னால் வருபவர்கள் உருவ வழிபாட்டை உயர்த்திப் பிடித்தால் தமது வழிபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அடிப்படை நோக்கத்தைச் சிதைத்து விடக் கூடும். ஆகவே இறைவனுக்கு உருவம் இல்லை; வடிவம் இல்லை என்கிற அந்த கோட்பாட்டை மிக அழுத்தமாகவும் வலுவாகவும் மக்களுக்குச் சொன்னவர் நபிகள் நாயகம்.
இதில் மிகச் சிறந்த ஜனநாயகத் தத்துவத்தை மானுடத்தின் அற்புதத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த 1400 வருடங்களில் பலரையும் மறந்தும் நாயகத்தின் திருவுருவப் படத்தையோ திருவுருவச் சிலையையோ உலகத்தில் எந்த நாட்டிலும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு எத்தனிக்கவில்லை; முயலவில்லை என்பது அவருடைய சிறந்த ஆளுமையை. அவருடைய தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது. அந்த அளவுக்கு அதில் அவர் ஓர் உறுதியான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறார்.
ஒரு மனிதனை வணங்குவதின் மூலம் அகந்தை உள்ளவனாக ஆணவம் மிக்கவனாக மாறுகிறான். அதனால் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. அவன் அரசனாக இருந்தாலும் சரி; தற்போதைய காலத்தில் இருக்கிற முதலமைச்சர், பிரதமராக இருந்தாலும் சரி, தனிமனிதர் வழிபாடு என்பது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அடிமைத்தனத்தை வளர்ப்பதற்கும் வழி வகுக்கக் கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. ஆகவே ஆண்டாம் அடிமை யாரும் இல்லை என்கிற ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டுமானால் தனிமனித வழிபாடு என்பது கூடாது. எனவே மனிதனை வழிபடுவது என்பது இந்த மானுடத்தை சிதைக்கும் நிலையை உருவாக்கி விடுகிறது. மன்னர்கள் எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
இறைவன் என்றால் கடவுளையும் குறிக்கும் அரசனையும் குறிக்கும். கோயில் என்றால் கடவுள் இருக்கிற இடத்தையும் குறிக்கும். அரசன் இருக்கிற இடத்தையும் குறிக்கும். ஆகவே மன்னம் வேறு அல்ல; இறைவன் வேறு அல்ல என்று எண்ணக் கூடிய அளவுக்குத் தனிமனித ஆதிக்கம் இந்த மண்ணுலகில் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது ஆகவே ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வழிபட விரும்புகிறான் அல்லது வழிபட வைக்கப்படுகின்றான் என்ற நிலை வருகின்றபோது அங்கு இயல்பாகவே அடிமைத்தனம் வந்து விடுகிறது.
ஆகவே தான் மனிதனை வணங்கக் கூடாது இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அந்த இறைவனும் உருவமற்றவன்; அவனுக்கு எந்த வடிவமும் இல்லை என்ற கோட்பாட்டை இந்த உலகுக்கு வழங்கி, அதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லாமல், தளர்வுக்கும் இடமில்லாமல் திசை மாறுவதற்கோ வழி தவறுவதற்கோ வாய்ப்பு இல்லாமல் ஓர் இறுக்கமான கோட்பாட்டை இந்த உலகிற்கு வழங்கியவர்தான் நமது நாயகம். அவர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
அவருடைய வாழ்க்கை முறை என்பது மிகச் சிறந்த ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை. எளியவர்களை மதிப்பது, எளியவனாகவே வாழ்வது, கடைசி மனிதர்களோடு உறவாடுவது, கடைசி மனிதர்களின் விடுதலைக்காக உழைப்பது, இவற்றுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி தலைவராக நபிகள் நாயகம் விளங்கி இருக்கிறார்.
(இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்)
Subscribe to:
Posts (Atom)

.jpg)

.jpg)