Showing posts with label திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. Show all posts
Showing posts with label திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. Show all posts

Tuesday, January 22, 2013

இந்து, கிறித்தவ சகோதரர்களின் கவனத்திற்கு திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கிறதா ?

                                   இந்து, கிறித்தவ சகோதரர்களின் கவனத்திற்கு...........!!
இந்து, முஸ்லிம், கிறித்தவர் என அனைத்து சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சான்களாகவும் வாழ்ந்து வரும் அமைதி பூங்காவான தமிழகத்தில் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தில் திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்க கூடிய புத்தகமாக கமல்ஹாசன் சித்தரித்துள்ளார்,

இந்த திரைப்படத்தை இஸ்லாமியர்களாகிய நாங்கள் கடுமையான முறையில் எதிர்ப்பது ஒருபுறம் இருந்தாலும், கமல்ஹாசன் சித்தரித்தது போல் திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கிறதா என்பதை தாங்கள் அறிய விரும்பினால் உடனடியாக தமிழ் குர்ஆன் இலவசமாக உங்களது இல்லம் தேடி அனுப்பி வைக்கிறோம்,

திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல... திருக்குர்ஆன் உலக மக்களுக்கே சொந்தமானது.

சிறுபான்மையாக வாழ்ந்து வரும் எங்களுடன் ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து எங்கள் தொப்புள் கொடி உறவுகளே....

நீங்கள் அந்த திருக்குர்ஆனை ஆய்வு செய்து படித்து விட்டு திருக்குர்ஆன் தீவிரவாதத்திற்கு ஆதரவாக களம் அமைக்கவில்லை, மாறாக தீவிரவாதத்தை வேரோடு கிள்ளி எரிகிறது என்பதை உணர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை இயற்றியுள்ளோம்,

திருக்குர்ஆன் தேவைப்படுவோர் உங்களது முகவரி, தொலைப்பேசி எண்களை குறிப்பிடவிரும்பினால் Message மூலம் தெரியப்படுத்தவும்,