Monday, December 31, 2012

காஷ்மீரில் பற்றி எழுத்தாளர்அருந்தி ராய் பேட்டி

காஷ்மீரில் இந்திய இராணுவம் பாலியல் பலாத்காரத்தை 
தங்களதுஆயுதமாக கொண்டு செயல்படுகின்றது :எழுத்தாளர்அருந்தி ராய்


புதுடெல்லி - முக்கிய இந்திய எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் “இந்திய இராணுவம் மற்றும் போலிஸ் காஷ்மீர் மற்றும் மணிப்பூர் வாழும் மக்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
புது தில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், சமீபத்தில் நடந்த தில்லி கற்பழிப்பு சம்பவம் பிரச்சினை பற்றி கேட்ட போது இதனை அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்தை உயர் ஜாதி இந்துக்கள் அல்லது இந்தியாவின் இராணுவ மற்றும் போலிஸ், ஆதிக்கத்தின் ஒரு வழிமுறையாக பயன்படுத்துகின்றனர், மேலும் இத்தகையவர்களுக்கு தண்டனைகளும் கொடுப்பதில்லை என்று கூறினார்.

இந்த கற்பழிப்புகள் முறையாக நடத்தப்பட்டு வருகிறது, இதில் தொடர்புடைய குற்றவாளிகளை இந்திய சட்டங்களே பாதுகாக்கின்றது. காஷ்மீர் போன்ற ஆக்கிரமிப்பு பகுதியில் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் மரண தண்டனை கொடுக்க கூடாது? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மக்கள் மன்றத்தில் அருந்த்தி ராய் அவர்கள் முன்வைத்தார்.

APHC சேர்மென் சையத் அலி கிலானி தனது அறிக்கை ஒன்றில் கூறுகையில், காஷ்மீரில் இது போன்ற சம்பவங்கள் நாள்தோரும் நடந்த வண்ணமாக தான் உள்ளது, ஆனால் நமது நாட்டு மக்கள் காஷ்மீரில் நடக்கும் பாலியல் வன்புணர்சிக்கு எதிராக மவுனம் காக்கின்றனர். குனன் பூஸ்பொரா, சானாபொரா மற்றும் சோபியன் ஆகிய சம்பவத்தின் வழக்கில் குற்றவாளிகள் யார் என்று தெரித்தும் கூட நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றாவாளிகள் சுதந்திரமாக உலாவருகின்றனர் என் கிலானி தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி மற்றும் APHC இன் தலைவர் ஜாபர் அக்பர் பட் தனது தனி அறிக்கையில் ஒன்றில் கூறிகையில் “இந்திய சிவில் சமூகம் இந்தியாவின் எல்லையோர பகுதியில் நடக்கின்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதில் இரட்டை முகத்தையே காட்டுகின்றனர்”.
தில்லி மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று போராடும் மக்கள், காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய துருப்புகளால் பாலியல் வன்புணச்சி செய்யப்பட்ட குனன் பூஸ்பொரா சம்பவத்திற்கு ஆதரவாக களமிரங்குவார்களா? என்பதே காஷ்மீர் இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.       

No comments:

Post a Comment